பூகோளமயமாதலால் கலாசாரம்,பண்பாடு மேம்படுகிறதா? பாதிக்கப்படுகிறதா? பூகோளமயமாதல் என்பது.. தொழிஙட்ப முன்னேற்றம் காரணமாக உலக நாடுகள் ஓர் அலகாக ஒன்றிணைக்கும் செயற்பாடு பூகோளமயமாதல் எனப்படும் . அதாவது உலகளாவிய ரீதியில் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாசாரம், தொடர்பாடல், போக்குவரத்து, தொழிஙட்பம் ஆகிய துறைகளின் உந்துதலினால் உலக நாடுகளிற்கிடையில் இடைவெளி குறைந்து ஒன்றில் ஒன்று தங்கிவாழும் நிலையை உருவாக்கிக்கொள்ளலாகும். இதன்பொருட்டு உலகின் எப்பாகத்திலும் நடக்கும் விடயங்களை அனைவரும் அறியும் வாய்ப்பும் கிட்டுகிறது. இவ் நாடுகளின் ஒன்றிணைவானது அரசு,வணிகம்,சமூகத்தொடர்பு,கலை,பண்பாடு,கல்வி,சுகாதாரம்,வேலைவாய்ப்பு என அனைத்து விடயங்களிலும் உலகநாடுகள் ஒன்றிணைவு பெற்று இயங்கிவருகின்றன. பூகோளமயமாக்கல் என்றால் என்ன என்பது தொடர்பாக பல அறிஞர்கள் பல்வேறுபட்ட வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளார்கள் அந்தவகையில் அன்ரனி கிடன்ஸ் என்பவர் குறிப்பிடும் போது “தொலைவில் இருக்கும் இடங்களை ஒன்றிணைக்கின்ற பல மைல்களுக்கப்பால் நிகழும் சம்பவங்களை உள்ளுர் நிகழ்வுகளாக உருவமைக்கின்ற உலக அளவிலான சமூக உறவுக...
ஆண் மகன் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே நன்மை பயக்கும். ஆனால் குடும்பத்தில் ஒரு பெண் கல்வி கற்றால் முழுக் குடும்பமும் நன்மை பெற்றுக் கொள்ளும். சமுதாயத்தில் உள்ள அணைத்து பெண்களும் கல்வி கற்றுக் கொள்வதால் சமுதாயம் முழுவதும் நன்மை பெறுகிறது. அதன் மூலம் முழு நாடும் வளர்ச்சிஅடைகிறது இப்படிக் கூறினார் இந்தியாவின் தேசத்தை சேர்ந்த மகாத்மா காந்தியடிகள். கடந்த நாட்களில் தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக நடத்தப்பட்ட பெண்கள் எப்படி இந்த அளவிற்கு உயர்ந்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் கல்வியே என புலப்படும். கல்விக் கண் என்று ஆன்றோரால் அழைக்கப்படும் கல்வியே மக்களின் கண்களை திறந்தது எனக் கூறலாம். சமுதாயத்தில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது என நாம் ஆராய்ந்து பார்த்தால் ஆண்களுக்கு எப்போதும் உயர்வான அல்லது தலைமை இடங்கள் அளிக்கப்பட்டன. ஆனால் பெண்களுக்கே அடிப்படை வசதிகளும் உரிமைகளும் கூட மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட காலங்களே அதிகமாக ஆதிக்கதிலிருந்ததை சரித்திரத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்பதே அனைவரது கருத்தாகவும் இருந்தது. ஆன...
இயற்கை அற்புதமான படைப்பு . உலகில் எண்ணற்ற அழகுகளை இயற்கை எமக்கு தந்துள்ளது. இந்த இயற்கை காட்சிகளின் இனிமையில் மனதைப் பறிகொடுக்காதவர் யாரும் இருக்க முடியாது. இயற்கை அன்னை வழங்கும் இனிய காட்சிகள் எமக்கு இணையற்ற இன்பம் தருகின்றன. அப்படிப்பட்ட இயற்கை வளங்கள் இன்று நவீனவளர்ச்சியினால் அழித்தொழிக்கப்படுகின்றன. ஆரம்பகாலத்தில் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த மனிதன் எப்போது இயற்கையை மாற்றியமைக்க தொடங்கினானோ அன்றே இயற்கை வளங்கள் அழியத்தொடங்கிவிட்டன. பழந்தமிழர்கள் இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்தனர். இவர்கள் தமது வாழ்க்கையை இயற்கையின் இனிய சூழலோடு அமைத்துக் கொண்டனர். அவர்கள் தாம் வாழ்ந்த சூழலினை பண்படுத்தி இயற்கை முறை விவசாயமும் மேற்கொண்டனர். ஆனால் இன்று நவீன வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட மனிதன் இயற்கையை அழித்துக் கொண்டதோடு இயற்கை மூலமான நன்மைகளையும் மறந்தவனாக காணப்படுகிறான். இயற்கையை மறந்து செயற்கை உலகின் மாற்றத்தை எதிர்கொள்ளும் மானிடர்கள் தம் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்...
Comments
Post a Comment