வழக்கிழந்துவரும் பஜனை வழிபாடு
இராமர் பஜனை
வருடம் தோறும் மார்கழி மாதம் இந்துக்கள் வழிபடும் ஒரு வழக்காக இந்த இராமர் பஜனை காணப்படுகிறது. இவ் வழிபாடு ஒரு மாத திருவிழாக்கோலமாக மலையகத்திலும் வடக்கு பகுதிகளிலும் வழிபடப்படுகின்றது.
இவ் வழிபாடு இராமர்,சீதா,ஆஞ்சநேயர் ஆலயத்தில் இடம்பெறும். வடக்குப் பகுதிகளில் கிராமப்புறங்களில் இன்றும் ஒரு சில இராமர் ஆலயங்களில் இவ் வழிபாட்டு முறையைக் காணலாம்.
தமிழிற்கு மார்கழி 1 விளக்கு வைக்கப்பட்டு கம்ப விளக்கில் எண்ணை ஊற்றி, பக்தர்கள் காப்பு அணிந்து, ஊர் ஊராக சாமி சுற்றி பஜனை பாடல் இசைத்து, வழிபாடு மேற்கொள்வார்கள். சாமி ஆடுதல்,குறி சொல்லுதல்,தீ மிதித்தல் போன்ற பாரம்பரியத்தை பேணும் சடங்குகள் இடம்பெறும்.
இன்று இக்கிராமிய வழிபாட்டு முறைகள் வழக்கிழந்து போகும்நிலையே காணப்படுகின்றது.


Comments
Post a Comment