முல்லைத்தீவு கடற்கரை மாலைச் சந்தை
முல்லை மண்ணானது மருதமும் நெய்தலும் இணைந்த பிரதேசமாகும். இங்கு வாழ்பவர்களின் பிரதான தொழிலாக விவசாயமும்,மீன்பிடியும் காணப்படுகின்றது.
கடற்கரை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.நீண்ட நாட்களுக்கு பின்னர் கடற்கரைக்கு செல்லும் எண்ணம் தோன்ற மாலை வேளை நானும் என் நண்பியும் முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றோம்.
மாலை நேரம் கடற்கரையின் அழகை கண்டு கழிப்பதில் ஓர் ஆனந்தமே.
முல்லைத்தீவில் மாலை நேர சந்தை பிரபல்யமானதொன்றாகும். காலையில் மீன்பிடிக்க சென்றவர்களும் கரைவலை இழுக்கும் மீனவர்களும் மாலை வேளையில் சந்தை வியாபாரத்தில் ஈடுபடுவர்.
பத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் இணைந்து வலையிழுத்தனர் அப்போது "ஏலேலைலோ" என வேலைக் களை தெரியாதிருக்க பாடல் பாடி வலையிழுத்தனர்.
கரையை நோக்கி வலையிழுத்த பின்னர் மீன்கள் வாளை,நெத்தலி,சூடை,பாரை என வகைப்படுத்தப்பட்டதும் சந்தைக்கு கொண்டுசென்று வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
மாலைவேளை உடன் மீன்வாங்க அதிகமானோர் வருவதை காணமுடிந்தது. இவ் மாலைச்சந்தை புதுவித அனுபவமாகக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன் இதற்கு பின்னால் இருக்கும் மீனவர் வாழ்வியலை எண்ணிப்பார்த்தவாறு.




Comments
Post a Comment