பெண்தலைமைத்துக்குடும்பங்கள்

           


       வடக்கில் யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் பல பெண்கள் கணவரை இழந்துவிட்ட நிலையில் தமது பிள்ளைகளை, குடும்பத்தை தாங்குகின்ற தூண்களாக மாறியிருக்கின்றனர். யுத்தத்திற்கு முன்னர் சீரான கட்டுக்கோப்பான வாழ்வியலமைப்பானது யுத்தத்தின் பின்னர் காணப்படவில்லை என்பதே யதார்த்தம்.

ஒரு பெண் மனதளவில் தைரியசாலி எனினும் இச்சமூகத்தில் ஆணுக்கு நிகராக குடும்பத்தைக் கொண்டு நடத்துவது மிகவும் போராட்டகரமானதே. சமூகத்தில் தேவையற்ற கருத்துக்கள் ஆணைவிட பெண்ணிற்கே அதிகம். பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும், பிற ஆண்களுடன் நட்பு பாராட்டக்கூடாது, அதிலும் கணவனை இழந்த பெண் மறுமணம் செய்வது எமது கலாசாரம் இல்லை, இப்படியாக சமூகத்தில் பெண் மீதான அபிப்பிராயம் உள்ளது. 

ஆனால் இதெல்லாம் கடந்து ஒரு குடும்பத்தின் ஆணிவேராக குடுப்பப் பொறுப்போடு கூலிவேலை செய்துகூட குடும்பத்தை பார்க்கும் பல பெண் தலைமைகளை வடக்கில் குறிப்பாக வன்னிப்பகுதியில் காணலாம். இவர்கள் சமூகப்பொறுப்புடன் தம் பிள்ளைகளை சிறந்த நிலைக்கு கொண்டுசெல்ல பல போராட்டங்களை சந்திக்கின்றனர் இவர்களுக்கு பக்கபலமாக செயற்படுவது சமூகத்தில் அனைவரதும் கடமையாகும்.

Comments

Popular posts from this blog

பூகோளமயமாதலும் பண்பாட்டு மாற்றமும்

பெண் கல்வியின் முக்கியத்துவம்

இயற்கையை பாதுகாப்போம்.