உலக வன உயிரிகள் தினம்
இன்று மார்ச் 3 உலக வன உயிரிகள் தினம் தினமாகும். சர்வதேச அளவில் அழிந்துவரும் உயிரினங்களை காக்கும் நோக்கில் இத்தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இன்றைய காலத்தில் அபிவிருத்தி எனும் பெயரில் சட்டவிரோதமாக காடுகளை அழிப்பதால் காட்டில் வாழும் யானை,புலி,சிங்கம் உள்ளிட்ட அரியவகை உயிரினங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி காட்டுத்தீ, காடழிப்பால் பல உயிரினங்கள் இடம்பெயர்ந்து விவசாயம் செய்யும் பகுதிகளுள் வருகின்றன.
2013 ம் ஆண்டு ஐ.நா பொதுக்கூட்டத்தில் மார்ச் 3 உலக வன உயிர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அனுஸ்டிக்கப்படுகிறது.
உலகில் பல வனவிலங்குகளும் செடிகொடிகளும் உள்ளன. வன உயிரினங்கள் அழிவடைவதால் உணவுச்சங்கிலி,உணவு வலை குழப்பமடைந்து சூழல் சமநிலை பாதிக்கப்படும் . ஆகவே சூழல் சமநிலையாக இருக்க வன உயிர்களை பாதுகாப்பது அவசியமாகின்றது.
மனிதர்கள் இயற்கையை அதிகளவில் சுரண்ட தொடங்கிய பின் இயற்கை சீற்றத்திற்கு இலக்காகி இருக்கின்றோம். இது எம்மால் ஏன் உணரமுடிவதில்லை என்பதே கேள்வி. யானை,புலி போன்றன தந்தத்திற்காகவும் தோலுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன.
அண்மையில் அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அதிகளவு உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகின. இதனால் பல சூழல்சார் பிரச்சினைகள் உருவாகின.
விலங்குகளை, காட்டு உயிர்களைபாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை இளையோர் மத்தியில் விழிப்புணர்வு செய்யவேண்டியது கட்டாய தேவை ஆகின்றது. வன உயிர்களை பாதுகாப்பதென்பது குடிமக்கள் ஒவ்வொருதரின் கடமையாகும்.

Comments
Post a Comment