பெண் கல்வியின் முக்கியத்துவம்
ஆண் மகன் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே நன்மை பயக்கும். ஆனால் குடும்பத்தில் ஒரு பெண் கல்வி கற்றால் முழுக் குடும்பமும் நன்மை பெற்றுக் கொள்ளும். சமுதாயத்தில் உள்ள அணைத்து பெண்களும் கல்வி கற்றுக் கொள்வதால் சமுதாயம் முழுவதும் நன்மை பெறுகிறது. அதன் மூலம் முழு நாடும் வளர்ச்சிஅடைகிறது இப்படிக் கூறினார் இந்தியாவின் தேசத்தை சேர்ந்த மகாத்மா காந்தியடிகள். கடந்த நாட்களில் தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக நடத்தப்பட்ட பெண்கள் எப்படி இந்த அளவிற்கு உயர்ந்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் கல்வியே என புலப்படும். கல்விக் கண் என்று ஆன்றோரால் அழைக்கப்படும் கல்வியே மக்களின் கண்களை திறந்தது எனக் கூறலாம். சமுதாயத்தில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது என நாம் ஆராய்ந்து பார்த்தால் ஆண்களுக்கு எப்போதும் உயர்வான அல்லது தலைமை இடங்கள் அளிக்கப்பட்டன. ஆனால் பெண்களுக்கே அடிப்படை வசதிகளும் உரிமைகளும் கூட மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட காலங்களே அதிகமாக ஆதிக்கதிலிருந்ததை சரித்திரத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்பதே அனைவரது கருத்தாகவும் இருந்தது.
ஆனால் இன்றைய காலத்தில் பெண்கள் கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறிந்து பல்துறையிலும் சாதிக்கும் பல சந்தர்ப்பங்களை நாம் காணமுடிகிறது. எனினும் கிராமப்புறங்களில் பல பெண்கள் கல்வி கற்க முடியாது போகும் சந்தர்ப்பங்கள் நாம் அறிந்தவையே. இவற்றிற்கு பல காரணங்கள் உண்டு. மக்களின் வாழ்வியல்,வறுமை,பண்பாடு,அறியாமை இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம். இவற்றிலிருந்து பெண்கள் முன்னேறும் சூழல் இப்போது உருவாகிவருகின்றது . எனினும் பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய புரிதல் அவசியமாகவே காணப்படுகின்றது.

Comments
Post a Comment