வாக்கு எங்கள் உரிமை

               

                   நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வாக்கு மிக அத்தியாவசியமாகும். வாக்கு என்பது பொது மற்றும் அரசியல் தேர்வுகளில் வாக்களிக்கும் உரிமை ஆகும். வாக்குரிமை தகுதியென்பது 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம்,  சட்டமன்றம், நகராட்சி மன்றம்,  உள்ளூராட்சி மன்றம் ஆகியவற்றுக்கான உறுபிபனர்களைத் தேர்ந்தெடுப்பதற்க்கு தேர்தல்கள் நடைபெறுகின்றன. நாட்டின் குடிமக்கள் தங்கள் வாக்குகளை வழங்கிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வாறு வாக்களிப்பதற்கு குடிமக்களுக்கு உள்ள உரிமையை வாக்குரிமை என்கிறோம்.இத்தகைய வாக்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பாக அறிந்திருப்பது மிகவும் அவசியமானதாகும். 


வாக்களித்தல் என்பது எங்களுக்காக நாங்கள் செய்ய வேண்டிய கடமை. நாங்கள் நேசிக்கும் நபர்களுக்காகவும், எங்கள் நாட்டின் வளர்ச்சிக்காகவும், எங்களது நலனுக்காகவும் நாங்கள் வாக்களிக்கவில்லை என்றால் எங்களுக்காக யார் வாக்களிப்பது ?

மக்களால் மக்களுக்காக நடாத்தப்படுபவையே தேர்தலும் அரசாங்கமும். ஆதலால், வெறும் பார்வையாளர்களாக இருந்து குறை மட்டும் சொல்லாமல் நல்லாட்சியை பெறுவதற்கு நாங்களே களம் இறங்க வேண்டிய காலம்.

இன்று அனைத்தையும் விரல் நுனிக்குள் கொண்டு வந்து விட்டது இணையம். ஆகவே உங்களுக்கு இந்த நடைமுறைகள்  புரியவில்லை என்றால் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நண்பர்களிடம், குடும்பத்தாரிடம் கேளுங்கள் , செய்தி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அறிந்து தெரிந்து கொண்டு உரிய செல்லுபடியாகும் வாக்கினை போடவும்.

தற்காலம் இளைஞர்கள் பலரும் வாக்களிப்பதில் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். ஆனால் இளமையை மட்டுமில்லாமல் உங்கள் எதிர்காலத்தையும் சேர்த்து யோசியுங்கள். வாக்களிப்பது உங்களது ஐனநாயக கடமை. நாங்கள் எடுக்கும் முடிவு எங்கள் எதிர்கால அரசின் மூலம் வெளிப்படும். ஆகவே இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். 

இன்றைய காலகட்டத்தில் பல நாடுகளில் அந்நாட்டு அரசாங்கத்தைத் தேர்தெடுப்பதற்கான வாய்ப்பு அந்நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை. காரணம் அவர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை. நமது முன்னோர்கள் போராடி பெற்ற உரிமை தான் வாக்குரிமை. இந்த உரிமைகளை நாம் பாராட்டி நாமாக முன்வந்து நம் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்.

  எனவே இந் நாட்டின் பிரஜை என்ற வகையில் எமக்கு இருக்கும் உரிமையை சரிவர  செய்து நம் நாட்டின் நல்லாட்சிக்கு பக்கபலமாக இருப்பது அவசியம் வாக்கு எங்கள் உரிமை.

Comments

Popular posts from this blog

பூகோளமயமாதலும் பண்பாட்டு மாற்றமும்

பெண் கல்வியின் முக்கியத்துவம்

இயற்கையை பாதுகாப்போம்.