டெங்கு! அவதானமாக இருப்போம்.
டெங்கு பற்றிய உண்மைகள்
- டெங்கு வைரசால் டெங்கு நோய் ஏற்படுகிறது.
- டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துவது ஈடிஸ் என்ற பெண் ஙளம்பு ஆகும்.
- இந்நுளம்பு பகலிலேயே அதிகம் கடிக்கும்.
- 3-14 நாட்களில் அறிகுறிகள் தோன்றும்.
மழை இல்லாத காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களாக பூச்சாடிகள்,பிளாஸ்டிக், தேங்காய் சிரட்டைகள் மற்றும் டயர்கள் போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது.
இந்நோயானது நேரடியாக நோயாளியிடம் இருந்து மற்றவர்களிற்கு பரவாது. நுளம்பின் மூலமே இந்நோய் பரவும் ஆகவே நோயாளியை தொடுதல், அருகில் இருத்தல் என்பவற்றின் மூலம் பரவாது.
அறிகுறிகள்
திடீரென கடும் காய்ச்சல்
அதிகமான தலைவலி எலும்புகளில் கடும் வலி
கண்களுக்கு பின்புறம் வலி
அதிகமான தலைவலி எலும்புகளில் கடும் வலி
கண்களுக்கு பின்புறம் வலி
உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும்
வயிற்றுழைவு
தலைச்சுற்றல்
டெங்கு காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் அதிக நீர்ச்சத்து உள்ள உணவுகளையே அதிகம் உட்கொள்வது சிறந்தது.அதாவது தோடம்பழச்சாறு,பப்பாளிப்பழம்,காய்கறி சூப்,புரோட்டீன் உணவுகள்,கஞ்சி, இளநீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
பாதுகாக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்
டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி எதுவும் இல்லை. நுளம்புகளை ஒழிப்பது ஒன்றே சிறந்த வழி. நுளம்பு பெருகாத வண்ணம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு செயற்பட வேண்டும்.
வீட்டிற்குள் நுளம்பு வர முடியாத படி பாதுகாத்தல்.நுளம்பு விரட்டி, நுளம்பு வலை என்பவற்றை பயன்படுத்தி நுளம்புக்கடியில் இருந்து தப்பித்தல்.காய்ச்சல் ஏற்பட்டு 24 மணித்தியாலங்களில் இரத்த பரிசோதனை செய்தல்,பரிசிட்டமோல் மாத்திரை மட்டுமே எடுத்துக்கொள்ளல் வேண்டும்.

Comments
Post a Comment