போதை பாவனை அற்ற நாட்டை கட்டியெழுப்புவோம்!
யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் "மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு" 10.12.2019 (செவ்வாய் கிழமை) ஊடகத்துறை ஆய்வுகூடத்தில் இடம்பெற்றது. இச்செயலமர்வில் ADIC நிறுவனத்தின் நிகழ்ச்சி அதிகாரி ரகீம் மற்றும் உதவி நிகழ்ச்சி அதிகாரி கோடீஸ்வரன் ஆகியோர் வளவாளர்களாகவும் ஊடகக் கற்கைகள் துறையின் இரண்டாம் வருட மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்செயலமர்வில்
1. போதைப்பொருள் பயன்படுத்துவதற்கான காரணம்
2. இதனால் ஏற்படும் பாதிப்புக்கள்
3.போதைப்பொருள் உற்பத்தி , விற்பனை மூலம் அரசாங்கத்துக்கு என்ன வருமானம் கிடைக்கின்றது.
4.இதனைத் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அந்த வகையில் இன்று ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர். இவர்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு இன்பத்தை பெறலாம் என எண்ணியே போதைப்பொருளை பயனபடுத்துகின்றனர். உண்மையில் இவற்றைப் பயன்படுத்துவதால தீமையே கிடைக்கின்றது. அதாவது தொடர்ந்து இவற்றைப் பயன்படுத்துவதால் உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுவதோடு உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. இதனால் சுவாச நோய்கள் , புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு போன்ற பல தீமைகள் ஏற்படுகின்றது. அத்துடன் குடும்பங்கள் பாதிக்கப்படுவதோடு நாட்டின் அபிவிருத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் போதைப்பொருள் உற்பத்தி, விற்பனை என்பவற்றால் அரசாங்கத்துக்கு இலாபம் கிடைக்கின்றது என எண்ணியே மக்கள் இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். உண்மையில் இதன் மூலம் இலங்கைக்கு மிகக் குறைந்தளவு வருமானமே கிடைக்கின்றது. இவற்றை உற்பத்தி செய்யும் வெளிநாடுகளுக்கே அதிக இலாபம் கிடைக்கின்றது.
மேலும் போதைப்பொருள் பாவனையை தூண்டும் விதமாக இன்றைய ஊடக விளம்பரங்கள் அமைகின்றன . எனவே இலங்கையில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு நாம் அனைவரும் தர்க்க ரீதியாக சிந்தித்து செயற்பட வேண்டும் . அத்துடன் ஊடகத்துறை சார்ந்தவர்கள் மூலம் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். எனவே நாம் அனைவரும் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.

Comments
Post a Comment