தமிழமுதம் 2020
தமிழர் எம் வீரம்,கலை,பண்பாடு,கலாசாரம்,விழுமியம் அனைத்தையும் ஒன்றினணக்கும் தமிழுக்கு ஓர் விழா தமிழமுதம் செம்மொழியிலே மூத்த மொழியான தமிழ் இன்று அழிவை எதிர்நோக்கி வருகிறது. தமிழ் எங்கள் அடையாளம் அதை கௌரவிப்பது எமது கடமையாகும்.சேர சோழ பாண்டியர் சங்கம் அமைத்து கட்டிக்காத்த மூத்த மொழியின் மரபு பண்பாட்டை காக்கவேண்டியவர்கள் தமிழர்கள் என்ற வகையில் யாழ்பல்கலை மாணவர் ஒன்றியம் ஏற்பாட்டில் வருடா வருடம் தமிழமுதம் எனும் மாபெரும் திருவிழா இடம்பெறுவது வழக்கம். அந்தவகையில் 08.01.2020 காலை 9 மணிக்கு யாழ்பல்கலைக்கழகத்தில் 2019 க்கான தமிழமுத விழா ஆரம்பமாகி எமது கலை,கலாசார பாரம்பரியங்களுடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு காலை சங்கிலியன் அரங்கில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தமிழர்களுக்கேயான மிடுக்குடன் நடனம்,நாடகம்,கவியரங்கம்,பட்டிமன்றம்,கும்மி,வீணாகானம்,இசை,பறை பாடல் , என பல்வேறு நிகழ்வுகளை காண முடிந்தது.

Comments
Post a Comment