மீளாத வடுக்கள்...!

சுனாமி
             சுனாமிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. கடந்த 2004 டிசம்பர் 26  முற்பகல் 1.30 மணியளவில் இந்தோனேசிய சுமாத்திரா தீவில் 9.2 ரிச்டர் அளவில் ஏற்பட்ட புவி அதிர்வு காரணமாக ஆழிப்பேரலை ஏற்பட்டது. இது உலக வரலாற்றில் மறக்க முடியாத  ஒரு கறுப்பு தினமாகும். இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியிருந்தது. தீவுக்கு கீழே 20 km ஆழத்தில் ஏற்பட்ட இவர் அதிர்வு இலங்கை,இந்தியா,மலேசியா, மியன்மார்,அந்தமான்,தாய்லாந்து உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரைகளைச்சூறையாடிச் சென்றுள்ளது. ஆசிய நாட்டில் 227898 உயிர்களை இந்த ஆழிப்பேரலை காவு கொண்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்களை நிர்க்கதியாக்கியது. இலங்கையில் 40 ஆயிரத்துக்கு மேலான மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதுடன் 21 ஆயிரம் பேர் காயமடைந்ததுடன் 5லட்சம் பேர் நிர்க்கதியாக்கப்பட்டனர் .

ஆழிப்பேரலை என்ற சொல்லையும் அதன் தாக்கத்தையும் அதுவரை அறிந்திருக்காத மக்கள் கடலில் திடீரென ஏற்பட்ட மாற்றத்தை பார்க்கக் சென்றனர். இதன் காரணமாகவே பல உயிர்கள் கடலுக்குள் இரையானது. இதன் பின்பே சுனாமிப் பேரலை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பரவத்தொடங்கியது. இன்று அனர்த்தத்தை முன்கூட்டியே அறிவதற்கான ஏற்பாடுகள் உலகின் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் சமுத்திர மாற்றங்கள் அவதானிக்கப்படுகிறன.

சுனாமி என்ற கொடும் அனர்த்தத்தில் இழக்கப்பட்ட மக்களுக்காக ஒவ்வொரு வருடமும் நினைவஞ்சலிகள் செய்யப்பட்டு  வருகின்றன. உலக வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயத்தை ஏற்படுத்திய ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 5 வருடங்கள் ஆகிய நிலையிலும் அது ஏற்படுத்திய தாக்கம் இன்றும் நெஞ்சை விட்டு நீங்காதவையாகவே காணப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 26 சுனாமி நினைவு நாளாக கொண்டாடப்படுவதுடன் தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாட்டின் பல பாகங்களிலும் நினைவேந்தல்கள் கொண்டாடப்பட்டதுடன் யாழ் பல்கலையிலும் இவ் நினைவஞ்சலி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

பூகோளமயமாதலும் பண்பாட்டு மாற்றமும்

பெண் கல்வியின் முக்கியத்துவம்

இயற்கையை பாதுகாப்போம்.