கனலி சஞ்சிகை வெளியீடு

யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் இரண்டாம் வருட மாணவர்களால் கனலி மாணவர் சஞ்சிகையானது வெளியிடப்பட்டது. நிகழ்வானது யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் கலாநிதி சி.ரகுராம் அவர்களின் தலைமையில் 02.12.2019 பி.ப 2மணி தொடக்கம் 4மணி வரை யாழ் பல்கலைக்கழக நூலகக் கலையரங்கில் இடம்பெற்றது..
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சிரேஷ்ட பேராசிரியர் க. கந்தசாமி (யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி) அவர்களும் சிறப்பு விருந்தினராக கலாநிதி கே.சுதாகர் ( பீடாதிபதி , கலைப்பீடம் , யாழ் பல்கலைக்கழகம் ) அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் ஊடக வல்லுனர்கள்,துறைசார்ந்தோர், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
"நல்லவை சுடர்விட தீயவை பொசுங்கிட" எனும் தொனிப்பொருளில் ஊடகக் கற்கைகள் துறையின் இரண்டாம் வருட மாணவர்களால் உருவாக்கப்பட்ட கனலி சஞ்சிகையானது முழுக்க முழுக்க மாணவர்களின் ஆக்கங்களை தாங்கியே வெளிவந்துள்ளது.. மாணவர்களின் அறிக்கையிடல் நுட்பங்களை செய்முறை ரீதியாக வெளிக்கொணரும் வகையில் இச்சஞ்சிகை அமையப் பெற்றுள்ளது.