பூகோளமயமாதலும் பண்பாட்டு மாற்றமும்

பூகோளமயமாதலால் கலாசாரம்,பண்பாடு மேம்படுகிறதா? பாதிக்கப்படுகிறதா?




 

 


பூகோளமயமாதல் என்பது..
   தொழிஙட்ப முன்னேற்றம் காரணமாக உலக நாடுகள் ஓர் அலகாக ஒன்றிணைக்கும் செயற்பாடு பூகோளமயமாதல் எனப்படும் . அதாவது உலகளாவிய ரீதியில் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாசாரம், தொடர்பாடல், போக்குவரத்து, தொழிஙட்பம் ஆகிய துறைகளின் உந்துதலினால் உலக நாடுகளிற்கிடையில் இடைவெளி குறைந்து ஒன்றில் ஒன்று தங்கிவாழும் நிலையை உருவாக்கிக்கொள்ளலாகும். இதன்பொருட்டு உலகின் எப்பாகத்திலும் நடக்கும் விடயங்களை அனைவரும் அறியும் வாய்ப்பும் கிட்டுகிறது. இவ் நாடுகளின் ஒன்றிணைவானது அரசு,வணிகம்,சமூகத்தொடர்பு,கலை,பண்பாடு,கல்வி,சுகாதாரம்,வேலைவாய்ப்பு என அனைத்து விடயங்களிலும் உலகநாடுகள் ஒன்றிணைவு பெற்று இயங்கிவருகின்றன.


பூகோளமயமாக்கல் என்றால் என்ன என்பது தொடர்பாக பல அறிஞர்கள் பல்வேறுபட்ட வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளார்கள் அந்தவகையில் அன்ரனி கிடன்ஸ் என்பவர் குறிப்பிடும் போது
“தொலைவில் இருக்கும் இடங்களை ஒன்றிணைக்கின்ற பல மைல்களுக்கப்பால் நிகழும் சம்பவங்களை உள்ளுர் நிகழ்வுகளாக உருவமைக்கின்ற உலக அளவிலான சமூக உறவுகளின் தீவிரப்படுத்தலே பூகோளமயமாக்கம்”எனக் குறிப்பிடுகிறார்.

பூகோளமயமாதலின் பலனாக பல்வேறுபட்ட விளைவுகளை காணமுடியும் . அவற்றில் நன்மை,தீமை என இரண்டுமே காணப்படுகின்றன. அந்தவகையில்
      
நன்மைகள்
அரசியல் தொடர்புகள்
பொருளாதாரம் செழிப்பு
வாழ்க்கைத்தரம் உயர்வு 
வேலைவாய்ப்பு 
தொழிஙட்ப வளர்ச்சி 
மருத்துவ வசதி
ஆயுட்காலம் அதிகரிப்பு
பல்சமூக கலாசாரம்  
பெண்கள் முன்னேற்றம்
தொடர்பாடல் வசதி 
தீமைகள்                                    

பல்தேசிய கம்பனிகளின் தாக்கம்
எல்லையற்ற நாடுகளின் உருவாக்கம் 
மூன்றாம் உலக நாடுகளின் இறைமை தலையீடு
மூளைசாலிகள் வெளியேற்றம்
வளச்சுரண்டல்
காலணித்துவம்
இன,மத பிரிப்பு
கலாசாரச்சிதைவு
நாடுகளுக்கிடையே முரண்பாடு 
வாழ்க்கைச்செலவு உயர்வு
வர்க்க வேறுபாடு
குடும்ப உறவுகள் சிதைவு
பண்பாடு,கலாசாரம்


    பூகோளமயமாதலில் முதலில் மாறிய பண்பாட்டுக்கூறு சமயமாகும். அதன்பின் மொழி,கலை,இசை,விளையாட்டு,உணவு,ஆடை அணிகலன்,நாகரிகம் என பலதிலும் மாற்றம் நிகழ்கின்றன. கலாசாரம்  என்பது சமூகத்திற்கு சமூகம் வேறுபட்டது. இவ்வகையில் பூகோளமயமாதலால் பண்பாடு ரீதியிலான மாற்றங்கள் பல ஏற்படுகின்றன அவற்றில் நன்மையான விடயங்கள் எனில் பல்வேறுபட்ட நாடுகளில் பலதரப்பட்ட சமூகங்களிலும் காணப்படும் மொழி,கலை,பழக்கவழக்கங்கள்,கலாசாரம், உணவு  முறை , வழிபாடுகள், ஆடை அணிகள் போன்றன நாட்டிற்கு நாடு இனத்திற்கு இனம் மதத்திற்கு மதம் வேறுபட்டவையாக உள்ளன. இவை அவர்களால் பூர்வீகமாகவே பேணப்பட்டு வருகின்றன .பூகோளமயமாதலால் நாடுகள் ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைவதன் காரணமாக இவ் மொழி,கலை,பண்பாடுகள் ஏனையோருக்கும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டுகிறது. இவ்வாறு பிற மொழி கலாசாரத்தை நாம் அறிவதன் மூலம் மற்றவர்களின் வாழ்க்கைமுறை பாரம்பரியம் கலாசாரத்தை நாமும் தெரிந்துகொள்வதோடு மதிப்பும் உருவாகக்கூடும் .
  பூகோளமயமாதலால் உலக நாடுகளிற்கிடையே தொடர்பு அதிகரிக்கும்போது அந்த நாடுகளின் பண்பாடு,கலாசாரம், பழக்கவழக்கங்கள் பற்றி அறிந்துகொள்வது எவ்வளவு நன்மையோ அதேபோல் வேற்றுக்கலாசாரம் பாரம்பரிய கலாசாரத்திற்குள் கலக்கப்படுவது தீமையாகின்றது.
மேலும் நவீன காலணித்துவம், அரசியல். பொருளாதார ரீதியான அமெரிக்கத் தலைமையிலான மேற்குலகின் மேலாதிக்கத்தை உலகில் வலுவடையச் செய்து உலகை அடிமைப்படுத்துவதை இலக்காகக் கொண்டதே பூகோளமயமாதல் ஆகும் எனவும் கூறலாம்.
பூகோளமயமாக்கம் பொருளாதார, அரசியல், கலாசார, சுற்றுச்சூழல் சர்வதேசத் தொடர்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் குறிக்கிறது. இது நாடுகளின் எல்லைக் கோடுகளை பொருத்தமற்றவையாக மாற்றும் பண்பு கொண்டவைகளாகும்.
பூகோளமயமாக்கம் என்பது தொலைத் தொடர்பு, போக்குவரத்து, தகவல்தொழில் நுட்பம் ஆகியதுறைகளின் முன்னேற்றங்களால் உந்தப்பட்டு, சமூகங்களுக்கிடையில் அதிகரிக்கும் தொடர்பினையும் அதனால் ஏற்பட்டு வரும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழும் நிலையையும் குறிக்கின்றது எனலாம்.

கோளமயமாதல் மரபுவழிப்பட்ட அரசியல், பொருளாதார, கலாசார, புவியியல் எல்லைகளை மீறுகிறது. மேலும் ஏற்கனவே இருந்து வருகின்ற சமூக வலைப்பின்னல்களின் செயற்பாடுகளை மேலும் வளர்ப்பதனையும் உருவாக்குவதனையும்; நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூக உறவுகள், மற்றும் செயற்பாடுகள் ஆகியவற்றின் பரம்பல், விரிவாக்கம் இதன் மூலமான நிதிச்சந்தைகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. மின்னியல் வர்த்தகம் இருபத்தினான்கு மணிநேரமும் நிகழ்கிறது. உலகத்தின் எல்லாப் பிரதேசங்களில் இருந்தும் பொருட்களை வாங்கக் கூடியளவுக்கு வர்த்தகமானது எல்லாக்கண்டங்களிலும் பரவி செயற்படுகிறது.

பூகோளமயமாதல் சமூகப்பரிமாற்றங்கள் மற்றும் சமூகச் செயற்பாடுகளின் தீவிரப்படுத்தலையும் வேகப்படுத்தலையும் உள்ளடக்கியுள்ளது. மிகத்தொலைவிலுள்ள தகவல்களை இணையம் சில நொடிகளில் அஞ்சல் செய்து விடுகிறது. தொலைதூர நிகழ்ச்சிகளின் உண்மைத் தகவல்களை படங்களாக செயற்கைக் கோள் மூலம் உடனடியாக பெற்றுக் கொள்ள முடிகிறது.
பூகோளமயமாதல் நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான எல்லைகள், தூரங்கள் என்பவற்றைக் குறைத்துள்ளதுடன் தொடர்புகளை மேலும் அதிகரித்துள்ளது. 
பூகோளமயமாதலின் விளைவாக இன்று பண்பாடு பாரிய மாற்றத்தை கொண்டிருக்கின்றது.
 அன்றாட உணவுப்பயன்பாட்டிலிருந்து ஆடை,அணிகலன் என அனைத்திலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதுமட்டுமன்றி பாரம்பரிய நிகழ்வுகளில் கூட  இன்று மேலைத்தேய கலாசார முறைகள் புகுத்தப்பட்டுள்ளன. 
உதாரணமாக திருமண நிகழ்வுகளில் free shoot,mahandhi funtion,reception போன்றனவும்  வளைகாப்பு, அட்ஷயதிதியை,ராக்கி,ஹோலி என பல புதிய கலாசார முறைகள் பின்பற்றப்படுகின்றன. 

பாரம்பரிய உணவுப்பழக்கங்களில் மாற்றங்களைக் காணமுடிகின்றது.ஆரோக்கியமான பழமைபேணும் உணவுமுறைகளை விடுத்து அவசர உணவுப்பழக்கவழக்கத்திற்கு பழக்கப்பட்டுவிட்டோம். உதாரணமாக பீட்சா,பர்கர்,kfc

குடும்ப வாழ்க்கை முறைகளிலும் உறவுமுறைகளிலும் தொழில்முறைகளிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல்சமூக கலாசார பிறழ்வுகள், மொழி மாற்றம், பெயர் சூட்டுவதில் மாற்றம்,பண்டைய கலை,கூத்து,விளையாட்டு மருவியமை போன்றன காணப்படுகின்றன.

நன்மைகள் எனும்போது வேற்றுக்கலாசார பாரம்பரியங்கள், நாடுகளுக்கிடையே கலாசார தொடர்புகள் , பண்பாட்டு ரீதியான தகவல் பரிமாற்றங்கள் ,பல மொழி பழக்கம், பல்சமூக பண்பாடு,கலைகள் என பல நன்மைகளும் காணப்படுகின்றன. 
உலகெங்கும் பண்பாடுகள், கலைகள் காவப்படுகின்றன.
உதாரணமாக கீழைத்தேய இந்து வழிபாட்டு முறைகள் மேலைத்தேய நாடுகளிலும் காணப்படுகின்றன.  வட அமெரிக்கா முருகன் கோவில் இசை,கூத்து போன்றன இணைய வழியிலும் உலகெங்கும் கொண்டுசெல்லப்படுகின்றன. 

அந்தவகையில் பூகோளமயமாதலால் கலாசார, பண்பாட்டு ரீதியில் நன்மை, தீமை இரண்டுமே நிகழ்ந்துள்ளன எனலாம்.





Comments

Popular posts from this blog

பெண் கல்வியின் முக்கியத்துவம்

இயற்கையை பாதுகாப்போம்.