ஒத்த செருப்பு- திரைப்பார்வை
ஒத்த செருப்பு size 7 திரைப்படம் ஒரு பார்வை
20 செப்டம்பர் 2019 வெளியான R. பார்த்தீபனின் ஒத்த செருப்பு திரைப்படம் திரை உலகின் ஒரு மைல் கல் ஆகும். இத்திரைப்படத்தின் சிறப்பு யாதெனில் எழுத்து ,தயாரிப்பு , இயக்கம், நடிப்பு அனைத்தும் பார்த்திபன் ஆவார். ஒரு க்ரைம் த்திரில்லர் மூவியான ஒத்த செருப்பு வழக்கமான சினிமாக்களில் இருந்து வேறுபட்டது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி சிறப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இத்திரைப்படத்தில் சட்டகத்தில்(frame) பார்த்தீபன் மட்டுமே இருப்பார் ஏனைய பாத்திரங்கள் குரல்ஒலி ஊடே நகர்கின்றனர். கிட்டத்தட்ட 105 நிமிடங்கள் கொண்ட இத்திரைப்படம் ஒரே ஒரு இடத்திலேயே படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் எடிட்டராக R.சுதர்சனும் பின்னணி இசை C.சத்தியா மற்றும் பாடலுக்கான இசை சந்தோஷ் நாராயணனும்
காணப்படுகின்றனர். ஒரு பாடல் மாத்திரமே வைக்கப்பட்டுள்ளது அதற்கு வரிகள் கவிஞர் விவேக், பாடகர்கள் சித் ஶ்ரீராம்,சங்கீதா,R. பார்த்திபன் ஆகியோராவர். இத்திரைப்படத்தில் மாசிலாமணி என்ற பாத்திரத்தில் பார்த்திபனும் மனைவி கதாபாத்திர குரலில் உஷாவாக காயத்திரியும் டொக்டர் கதாபாத்திர குரலில் தீபா வெங்கட்ராமனும் நடித்துள்ளனர் .
இத்திரைப்படத்தின் முதற்பகுதி கதை பார்த்திபனின் வழக்கமான பாணியில் நகர்கிறது. நடுத்தரவயதான மாசிலாமணி(பார்த்திபன்) ஒரு கொலைக் குற்ற வழக்கின் சந்தேகநபராக காவல்நிலையம் ஒன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதில் இருந்து பல மர்ம வினாக்களுடன் படம் ஆரம்பிக்கிறது . மாசிலாமணி தவிர மற்றைய பாத்திரங்களின் குரலை மட்டுமே பார்வையாளர்கள் உணர முடிகிறது. அதிகாரிகள் வழைமையான பாணியில் விசாரணையை நடத்த முயலும்போது மனித உரிமை ஆணையத்தால் கடிதம் அனுப்பப்பட உயர் அதிகாரி பக்குவமாக விசாரணையை தொடர்கிறார்.
விசாரணையின்போது மாசிலாமணி முன்னிற்கு பின் முரணாக வாக்குமூலம் கொடுக்க அதன் உண்மைத்தன்மையை அறிய பெண் உளவியல் வைத்தியர் சூரியா எனும் பெயரில் தீபா அழைக்கப்படுகிறார். தொடர் விசாரணையில் மாசிலாமணிக்கு உஷா(காயத்திரி) எனும் மனைவியும் மகேஷ் எனும் குழந்தையும் இருப்பதும் அக்குழந்தை நோய் காரணமாக இன்னும் சில வருடங்களே வாழும் எனவும் தெரியவருகிறது. மேலும் விசாரணையில் கொலைக்கான காரணத்தை வினவும்போது பணிபுரியும் இடத்தில் தன் மனைவியிடம் பதவியிலிருக்கும் சிலர் தவறாக நடக்க முயன்றதாகவும் அதனால் கொலை செய்ததாகவும் மாசிலாமணி ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் .
இச்சந்தர்ப்பத்தில் மேலும் சில கொலைகள் நடந்திருப்பதாகவும் அவை மாசிலாமணி ஒத்துக்கொண்ட கொலைச்சம்பத்தின் செயற்பாட்டுடன் ஒத்துப்போவதாகவும் இருக்க அவற்றையும் தானே செய்ததாக அசால்டாக ஒத்துகொள்ளும் காட்சி போலிஸ்காரர்களுடன் படம் பார்ப்போரையும் மிரளவைக்கிறது.
படத்தின் இரண்டாம் பகுதி யார்?ஏன்?எவ்வாறு? என்ற மர்மக்கேள்விகளுக்கான முடிச்சுக்களை அவிழ்ப்பதால் விறு விறுப்பாக நகர்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வு மிக்க ஒரு குடும்ப பெண் தன் சுய ஆடம்பரத்திற்காக வழிதவறிய நிலையில் அவளை அப்பிரச்சினையிலிருந்து மீட்பதற்காகவே அவளை பாலியல் ரீதியாக பயமுறுத்தி தவறாக பயன்படுத்திய பணக்கார வர்க்க நபர்களை கொலை செய்ததாக கூறுகிறார். எனினும் தன் மனைவி தான் நினைத்ததுபோல் இல்லை தன்னை ஏமாற்றியே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறாள் என ஒரு நிலையில் அறியவும் எதேற்சையாக விபத்துக்குள்ளாகி மனைவி இறந்ததாகவும் உடல் வைத்தியசாலையில் இருப்பதாகவும் கூறுகிறார். சரி இந்த ஒற்றை செருப்பிற்கும் கதைக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம். இதே கேள்வி எனக்கு மட்டுமல்ல விசாரணை அதிகாரிக்கும் இருந்தது அனைத்து கொலையும் ஒரே விதமாக செய்யப்பட்டிருப்பதுடன் தடையமாக size 7 ஒற்றைச் செருப்பை விட்டுச்சென்ற காரணத்தை கேட்டபோது மேலும் மிரளும் கதையை மாசிலாமணி கூறுகிறார்.
பல ஆண்டுகளுக்கு முன் அமைச்சர் ஒருவர் முரண்பாட்டால் அவரின் சொந்த சகோதரனை கொலை செய்ய தற்போதைய காவல்துறையின் உயர் அதிகாரியை நாடியதாகவும் அவரே கொலை செய்துவிட்டு ஒற்றைச்செருப்பை விட்டுச்சென்றதாகவும் இது தொடர்பான கானொலியை மாசிலாமணி பதிவு செய்து வைத்திருந்ததாகவும் அதே பாணியில் தான் கொலை செய்தால் தானும் மாட்டுப்படக்கூடும் என விசாரணை தொடரப்படாது ஆகையால் அதே MO வில் மாசிலாமணியும் கொலைகளை செய்ததாகவும் கூறினார்.
ஒரு உயர் அதிகாரி , அமைச்சர் ஆகியோர் ஒரு கொலை வழக்கில் தொடர்புபட்டிருப்பதை மூடி மறைப்பதற்காக மாசிலாமணியை விடுதலை செய்கின்றனர் . மனைவியின் மரணத்திற்கு கொலைகளே சமாதானம் என படம் முடிகிறது. இங்கு கமராவே ஆளாக பேசுகிறதை காணமுடியும் . பார்த்திபன் மட்டுமே பிறேமில் இருக்க மற்றைய பாத்திரங்கள் கமராவின் நகர்வாகவே இருப்பதுடன் குரல்கள் மாத்திரம் வழங்கப்பட்டிருக்கும் . மிக சிறந்த முறையில் நேர்த்தியாக புதிய கோணத்தில் இத்திரைப்பட கையாளல் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.

Comments
Post a Comment