தற்காலசூழலில் சமூக ஊடகங்கள் செயற்படும் விதம்
சமூக ஊடகம் எனப்படுவது...
சமூக ஊடகங்கள் எனப்படுபவை இணையவழியாக தகவல்கள்,கருத்துக்கள் வெளியிடப்படும் ஒரு தொடர்பாடல் முறையாகும். இவ் சமூக ஊடகங்களுள் Facebook,Twitter,instagram,google,YouTube,viber,whatsapp என பல காணப்படும். இவை தொழிஙட்பத்துடனான விடயங்களாகும். இச் சமூக ஊடகங்கள் பலவித பண்புகளை தன்னகத்தே கொண்டவை. கட்டுப்பாட்டு வரைமுறை அற்ற இவை தகவல்களை கடத்தும் வேகம் ஏனைய ஊடகங்களிலிருந்து வேறுபட்டன. உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு வேகமான முறையில் உடனுக்குடன் தகவலை பரிமாறிக்கொள்ள இவை உதவுகின்றன.
இவ் சமூக ஊடகங்களில் அனைத்து ஊடகங்களையும் ஒருங்கே காணும் வாய்ப்பு உள்ளது. அதாவது Facebook ஐ எடுத்துக்கொண்டால் தொலைக்காட்சி,வானொலி, பத்திரிகை,திரைப்படம் என அனைத்தையும் காணும் வாய்ப்பு காணப்படுகிறது. மேலும் சமூக ஊடகங்களில் ஒவ்வொரு தனிநபரும் ஊடகவியலாளராக செய்திகளை பதிவேற்றும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறான சமூக ஊடகங்களே பிரச்சினையான காலகட்டங்களிலும் தடை இன்றி இயங்கிவருகின்றன. உடனுக்குடன் செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல தற்காலத்தில் ஏனைய ஊடகங்கள் கூட சமூக ஊடகங்களையே பயன்படுத்துகின்றன. இவ் சமூக ஊடகங்களால் நன்மை , தீமை என இரு விளைவுகளும் காணப்படுகின்றன.
நன்மைகள்

- தகவல்கள் , கருத்துக்கள் பரிமாற்றம்.
- வேலைவாய்ப்பு
- குழு உரையாடல்
- பொழுதுபோக்கு
- புகைப்பட பதிவேற்றம்
- தனிமனித ஆளுமை
- சர்வதேசரீதியிலான நட்புறவு
- சமூக இசைவு, உதவி
- விழிப்புணர்வு
தீமைகள்
- தகவல் திருடப்படல்.
- தனிமனித சுதந்திரம் பாதிப்பு
- சட்டவிரோத பதிவேற்றம்
- போலிச் செய்தி பரப்பப்படல்
- ஏமாற்று நடவடிக்கை
- கலாச்சார மாற்றம்
- அடிமையாதல்
- கருத்து முரண்பாடு
இன்றைய சூழ்நிலையில் சமூக ஊடகங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என பார்ப்போமானால் தற்போது உலகளாவிய ரீதியில் பரவலாக பேசப்படும் விடயமாக கொரோனா காணப்படுகிறது. இந்த தருணம் இலங்கை உட்பட பல நாடுகளில் இதன் தாக்கம் காணப்படுகிறது இதனால் ஊரடங்குகள், தனிமைப்படுத்தல்,வீட்டில் இருத்தல் என பல பாதுகாப்புக்களை அரசு மேற்கொண்டுவரும் சந்தர்ப்பத்தில் ஊடகங்கள் தமக்கான கடமையை செய்தவண்ணமே உள்ளன. அச்சு ஊடகங்கள் அச்சுப்பிரதியை வெளியிடமுடியாத போதிலும் மின் பத்திரிகையாக சமூக ஊடகங்கள் வாயிலாகவே தம் கடமையை செய்கின்றன. இக்காலத்தில் அதிகளவு பயன்பாட்டில் சமூக ஊடகங்களே காணப்படுகின்றன . உடனுக்குடன் விரைவாக செய்திகளை பரிமாற்றுகின்றன.
மக்கள் வீட்டில் இருக்கும் நேரம் செய்தி,தகவல், விழிப்புணர்வு , பொழுதுபோக்கு என பல விடயங்களையும் சமூக ஊடகங்களே செய்கின்றன. அத்தோடு வறிய மக்களுக்கான உதவித்திட்டங்கள் பல சமூக ஊடகம் வழியே இடம்பெறுவதுடன் கல்வி நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. எனினும் சமூக ஊடகங்களால் நன்மை என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல தீமைகளும் உண்டு. காரணம் செய்தி பரவும் வேகம் அதிகம் எனவே போலிச்செய்திகள் வேகமாக பரவும் வாய்ப்பும் அதிகமாகும் இக்காலத்திலும் கொவிட்19 தொடர்பாக பல போலிச்செய்திகள் பரப்பப்பட்டும் வருகின்றன. அத்தோடு முரண்பாடான கருத்துக்கள், ஏமாற்று நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. எந்தவித கட்டுப்பாடும் அற்ற சமூக ஊடகம் அதனை பயன்படுத்துவோரின் சரியான தெரிவிலும் புரிதலிலுமே நன்மை தீமையை அடைய முடிகிறது.

Comments
Post a Comment