தாவர சக்தி நாள்

உயிரின வாழ்க்கைக்கு அடிப்படை தாவரங்கள்


மார்ச் 7 
தாவர சக்தி நாள்

மனித வாழ்வியல் இயற்கையுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். ஆரம்பத்தில் இயற்கையுடனே வாழ்ந்த நாம் இன்று இயற்கையை அழித்து வாழத்தொடங்கியிருக்கின்றோம். பூமியில் தாவரங்கள்,மரம்,செடிகள் ஏன் முக்கியம் என்பது எங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. 

இந்த பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஏன் நீரிலும் கூட வாழ்ந்து இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை தாவரங்கள். தாவரங்களின் அளவுகளும் மிகச் சிறிய நீரில் நேரடியாக வாழும் பாசி வகைகளிலும் சிலவற்றை மட்டுமே நாம் உணவாக மருந்தாக பயன்படுத்துறோம். அவற்றில் முக்கியமானவை அரிசி கோதுமை சோளம் போன்றவை. பல நாடுகளின் பொருளாதாரம் இதைப் பொறுத்தே நிலை பெறுகிறது. இதைவிட பல மில்லியன்  வருடங்களுக்கு முன் வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் இப்போது நாம் பயன்படுத்தும் பெற்றோல், மண்ணெண்ணை, டீசல் ஆகியவை கிடைக்கின்றன என்பதை பார்க்கும் போது தொழில் உலகின் அடித்தளமே தாவரங்கள் என்று கூறினால் மிகையாகாது. உயிரின சுவாசத்திற்கும் சுகமான தட்பவெப்பநிலை ஆகியவற்றை நிலைப்படுத்தவும் தாவரங்களாலேயே முடியும் எனும்போது மனித வாழ்க்கைக்கு தாவரங்களின் மிக ஆதாரமான பங்கை உணரலாம்.உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அடிப்படையாகத் தாவரங்கள் இருக்கின்றன.

Comments

Popular posts from this blog

பூகோளமயமாதலும் பண்பாட்டு மாற்றமும்

பெண் கல்வியின் முக்கியத்துவம்

இயற்கையை பாதுகாப்போம்.