ஆரோக்கியம் தினப்போராட்டமே!
‘எனது பிள்ளைகளுக்கு சுவையான ஆரோக்கியம் மிக்க உணவுகளை சமைத்துக்;கொடுக்க தினமும் பாடுபடுகின்றேன் ஆனால் இந்த பிள்ளைகள் கடைச்சாப்பாட்டையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் பிள்ளைகளுக்கு நோய்கள் வருமோ என எனக்கு பயமாக உள்ளது’
இது ஒரு தாயின் அங்கலாய்ப்பு.
ஆம் ஆரோக்கியம் என்பது மனிதன் நோயின்றி உயிர் வாழ்வதற்கு மிகமிக அத்தியாவசியமானது. நேரத்தோடு போட்டி போட்டுக்கொண்டு வேலை,பணம்,நவீனம் என ஓடிக்கொண்டிருக்கும் மனிதன் தன் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தவறிவிட்டான் என்றே கூறவேண்டும். மனிதன் மேல்நிலைக்கு செல்ல முயலும்போது உடல் உறுதியாக காணப்பட்டாலே அவன் அந்நிலையை அடையமுடியும். உடல் சோர்ந்து நோய்களும் உண்டாகும் பட்சத்தில் சீராக இயங்க முடியாதுபோகிறான்.
இன்றைய காலகட்டத்தில் தொழிஙட்பம்,வேலைச்சுமை,சீரற்ற உணவுப்பழக்கவழக்கம் போன்ற காரணங்களால் மன அழுத்தம்,நோய்கள் என பல பிரச்சினைகள் ஏற்படுவதால் இறப்பு,தற்கொலை,வன்முறை போன்றனவற்றை சந்திக்க நேரிடும்.இந்த ஆரோக்கியம் என்ற விடயத்தினுள் உணவுப்பழக்கவழக்கம்,சுகாதாரம்,தியானம் என பல விடயங்கள் உள்ளடங்குகின்றன.
முன்பு நாம் இயற்கை உணவு, வியர்வை சிந்திய உழைப்பு என இருந்தமையால் உடல், உள ஆரோக்கியம் சீரானதாகக் காணப்பட்டது. ஆனால் இன்று உணவுப்பழக்கவழக்கம்,வாழ்க்கைமுறை என்பன முற்றாக மாறிவிட்டதால் இன்றைய சமூகத்தில் வாழும் இளம் தலைமுறையினரின் ஆரோக்கியம் குறித்த அச்சம் எம்முள் நிலவுகின்றது. நாம் இன்று எமது ஆரோக்கியத்தை மறந்து அதிகம் விரும்பி உண்ணும் துரித உணவுகளான பாண்,கேக்,பேஸ்டி,பீட்~h பர்கர்,கொத்து,ப்றைட் றைஸ்,சிக்கன் ப்றைட் என வாயில் நுழையாத வார்த்தைகளைக்கொண்ட உணவுகளை உண்பதனால் அதன் விளைவாக உடற்பருமன்,குருதிச்சோகை,நீரிழிவு, குருதி அமுக்கம்,புற்றுநோய்,இதயநோய் என பல நோய்கள் மிக வேகமாக உருவாகிவருகின்றன.
இதுவே எமது முன்னோர்கள் காலத்தில் உண்ட உணவுகளான குரக்கன்,திணை,வரகு,இலைக்கஞ்சி,பனங்கிழங்கு,கிருமி நாசினி அற்ற கீரை,காய்கறி,பழவகை போன்றவற்றால் எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி உடல் ஆரோக்கியத்துடன் அதிக காலம் வாழ்ந்ததையும் அறியமுடியும். இதன் உண்மைத்தன்மையை இந்த தலைமுறை எண்ணத் தவறுகின்றது.
அதுமட்டுமன்றி இருந்த இடத்தில் தொலைக்காட்சி,தொலைபேசி,கணனி என குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் நாம் முந்தைய கால உல்லாசமான விளையாட்டுக்களையோ, உறவுகளுடன் கூடியிருந்து கதை பேசும் ஆரோக்கியமான உரையாடல்களையோ இன்று நாம் நினைப்பது கூட இல்லை.
எமது தாய் தந்தையரிடம் கேட்டுப்பாருங்கள் பள்ளி விட்டு வீடு திரும்பியதும் மாலை நேரத்தில் நண்பர்கள் கூடி விளையாடுதலின் மகிழ்வை, வழிபாட்டின் பலனை, உறவுகள் அனுசரிப்பின் மகிழச்சியை, பாரம்பரிய உணவுகளின் சுவையை. ஆனால் இன்று துள்ளித்திரியவேண்டிய ஒரு 10 வயது சிறுவனின் பரீட்சை ஒன்றுக்கான ஒரு நாள் வாழ்வைப் பாருங்கள். “காலை 4 மணிக்கு எழுப்பி 4-6 படிப்பாம் பின்பு 6க்கு ~;பெஸல் கிளாஸ் 7மணிக்கி வரும் பிள்ளை 7.30 ~;கூல்,1.30 க்கு பாடசாலை முடிந்ததும் வீட்டுக்கு வரும் என்று பார்த்தால் 2-4 எக்ஸ்ரா கிளாஸாம், அது முடிந்ததும் சோர்ந்து விழுந்து வரும் பிள்ளையை விடுவதாக இல்லை. 5-6 இங்லீ~; கிளாஸாம் அது போக 7-9 பேப்பர் கிளாஸ்” இப்படி தன் பிள்ளை எப்படியாவது பரீட்சையில் சித்தியடைந்தால் சரி என சிந்திக்கும் நம் சமூக பெற்றோருக்கு பிள்ளையின் ஆரோக்கியத்தை விட தங்களின் கௌரவம் பெரிது என இருப்போர் பலர்.
நவீனம் நவீனம் எனப்பேசி
Comments
Post a Comment