வாசிப்பின் முக்கியத்துவம்
நல்ல நூல் ஒரு நல்ல நண்பன்
நவீன உலகில் ஓய்வுக்காகக்கூட நேரம் ஒதுக்கமுடியாது அல்லல்படும் நாம் நூல்களை வாசிக்கவா நேரம் செலவிடப்போகின்றோம்.
வாசிப்பினால் உண்டாகும் நன்மைகள் பற்றி இன்றைய சமூகம் நினைத்துப் பார்ப்பதில்லை. நூல்களை வாசிப்பதால் அறிவு வளர்ச்சியடையும். புத்துணர்வு கிடைக்கும். மனோவளர்ச்சி அதிகரிக்கும். ஆனால் இன்று தொலைபேசிக்குள் மூழ்கியிருக்கும் எம் சமுதாயம் இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி சிந்திப்பதில்லை. தொடர்ந்து தொலைபேசி பயன்படுத்துவதால் கண்பார்வை முதல் இதய பாதிப்பு மட்டுமன்றி மனோவியாதி ஏற்படும் வாய்ப்புக்களும் அதிகம். வாசிப்பு ஒருவனை சமூகத்தில் உயர்த்தியே வைக்கும். நல்ல அறங்களைக் கற்றுத்தரும்.


Comments
Post a Comment