ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகும் அடையாளங்கள்-வெடுக்குநாறி மலை

           


ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்படும் நிலையில் உள்ள வட பகுதியின் மலைக்கோயில்கள்
தமிழரின் பாரம்பரியம்,பூர்வீகம் என போற்றப்படும் பல இடங்கள் இலங்கையின் வடபகுதியில் காணப்படுகின்றன. இவை தமிழ் பூர்வீகர்களின் நினைவுவழிவந்த அடையாளச்சின்னங்களாகும். இலங்கையை பொறுத்தமட்டில் நில ஆக்கிரமிப்பு என்பது எழுதப்படாத விதி ஆகும். கடந்த சில ஆண்டுகளாக நில ஆக்கிரமிப்பு தொடர்பான கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் அதிகளவு மக்கள் மத்தியில் பேசுபொருளாக காணப்பட்டது. குடியேற்றங்கள், விகாரை அமைப்பு, பயிர்ச்செய்கை நடவடிக்கை என பல நோக்கங்களில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அண்மைய காலத்தில்கூட பேசப்பட்ட நில ஆக்கிரமிப்புக்களாக வவுனியா வடக்கில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர், முல்லைத்தீவு தெற்கில் குருந்தூர் மலை ஐயன் இன்னும் பேசப்படாத பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றே வருகின்றன. இவற்றின் வரலாற்றையும் தற்போதைய நிலைப்பாட்டையும் பேசுவது காலத்தின் தேவையாகும். 
இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவிலாகும். இக் கோயில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் நெடுங்கேணி-ஒலுமடு-பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட நான்கு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இவ் வெடுக்குநாறி மலைப் பகுதி கடந்த 2018 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வு திணைக்களம் மற்றும் வனவள திணைக்களம் இணைந்து அரசுடைமையாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. 

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3 km தொலைவில் வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது.  

சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த மலையின் வரலாறானது பல வரலாற்று சிறப்புக்களை கொண்டு காணப்படுகின்றது. 

300m உயரமான வெடுக்குநாறி மலை அடிவாரத்தின் கீழ் தமிழ் பிராமிய கல்வெட்டிக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள் போன்றவற்றை காணமுடியும். 

மலையின் உச்சியில் ஆதிலிங்கேஸ்வர் எனும் சிவனுடைய லிங்கம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 5 தலைமுறையினருக்கு மேலாக இப்பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகின்றனர். 

2018 ஆம் ஆண்டில் இலங்கை தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களத்தினர் இம்மலைக்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது.

ஆனாலும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பினை அடுத்து இத்தடையினை நெடுங்கேணி காவல் துறையினர் தற்காலிகமாக நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்கொள்ள தற்போது அனுமதித்திருந்தார்கள்.

அங்கு பிராமிய கல்வெட்டுக்கள்,தூண்தாங்கி கல், மர்மக்கேணி, இராஜ நாக குகை, மலையின் உச்சியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் மற்றும் எம் வரலாறு தொல்லியல் எச்சங்களை பார்வையிடமுடியும்.

Comments

Popular posts from this blog

பூகோளமயமாதலும் பண்பாட்டு மாற்றமும்

பெண் கல்வியின் முக்கியத்துவம்

இயற்கையை பாதுகாப்போம்.