இளம் தொழில்முனைவோருக்கான 1 லட்சம் காணிவழங்குதல் திட்டம்

   


          கடந்த 2020 இல் இலங்கை அரசின் ஒரு திட்டமாக 100,000 காணித்துண்டுகளை வழங்கும் நோக்கில் பொதுமக்கள் மத்தியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் இவ்வாண்டு நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக்கள் அனுப்பப்பட்டு கட்டம் கட்டமாக நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறுகின்றன.100,000 காணித்துண்டுகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் நேர்முகப் பரீட்சைகளில் புள்ளித்திட்டமிடலின் அடிப்படையிலேயே பயனாளிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். 

 இதன் பொருட்டு பல விடயங்களை நேர்முகப் பரீட்சையில் உள்ளடக்கியுள்ளனர்.

1. தேசிய அடையாள அட்டை (NIC) கொண்டு செல்ல வேண்டும்

2. கிராமசேவகர் இடம் பெற்ற வதிவிட சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்

3. சமாதான நீதவானிடம் (JP) பெற்ற - உங்களிடம் பயிர்ச்செய்கைக்கான காணி இல்லை என்ற  சான்று உறுதிப்படுத்த வேண்டும்.

4. உங்களது கருத்திட்டம் எது தொடர்பானது என கூறவேண்டும் (விவசாயம், உற்பத்தி, தொழிற்சாலை)

பின்வரும் புள்ளியிடல் திட்டத்தை கவனத்தில்கொள்க.

1. உங்களுடைய வயது 18 - 45 எனின் - 15 புள்ளிகள்

2. உங்களுக்கு தொழில் தொடர்பான அறிவு காணப்பட்டால் -  10 புள்ளிகள்

3. செய்முறை பயிற்சி அல்லது முன்அனுபவம் காணப்பட்டால் - 10 புள்ளிகள்

4. கருத்திட்ட முன்மொழிவு Project Proposal சமர்ப்பிக்கப்படல் மற்றும் அதன் உள்ளடக்கம் பற்றி கூறக் கூடியதாக இருந்தால் - 15 புள்ளிகள்

5. ஐந்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய கருத்திட்டம் ஆயின் - 10 புள்ளிகள்

6. தொழில் முயற்சியின் இயல்பின் அடிப்படையில் 

i) பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்கு - 5 புள்ளிகள் 

ii) இறக்குமதிக்கு மாற்றீடான உற்பத்தியாயின் - 5 புள்ளிகள் 

iii) புதிய தொழில்நுட்பம் முயற்சியின் - 5 புள்ளிகள் 

iv) புதிய கண்டுபிடிப்பு அல்லது செயலற்ற வளங்களை பயன்படுத்தினால் - 5 புள்ளிகளும் வழங்கப்படும்.

7. முதலீடு தொடர்பாக 

i) விண்ணப்பதாரரின் நிதி மூலமாயின் 5 புள்ளிகளும் 

ii) பௌதிக வளம் அல்லது வாகனம் / இயந்திரம் / உபகரணம் / கட்டடம் என்பனவற்றிற்கு 5  புள்ளிகளும் வழங்கப்படும்

8. சந்தை வாய்ப்புக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்

9. ஏனைய விடயங்களில் 

i) குறைந்த வருமானம் மற்றும் ஆற்றலுடைய விண்ணப்பதாரரின்  - 3 புள்ளிகளும் 

ii) ஆக்க உரிமை அல்லது படைப்பாற்றல் அல்லது தரச்சான்றிதழ் உடைய விண்ணப்பதாரரின் 3 புள்ளிகளும் வழங்கப்படும்.

இச் சான்றாதாரங்களும் புள்ளித்திட்டத்தினதும் அடிப்படையிலேயே காணித்துண்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதை மக்கள் அக்கறையின்றி இருக்காது கவனத்தில் கொண்டு செயற்படுவது மக்களின் தேவையாகும்.

Comments

Popular posts from this blog

பூகோளமயமாதலும் பண்பாட்டு மாற்றமும்

பெண் கல்வியின் முக்கியத்துவம்

இயற்கையை பாதுகாப்போம்.