சினம்கொள் திரை விமர்சனம்
இலங்கை சினிமா- சினம்கொள் இலங்கை சினிமாவிற்கு என ஓர் வரலாறே உண்டு. இலங்கையில் சிங்களத்திரைப்படங்கள், தமிழ்த்திரைப்படங்கள் என சினிமா பாதை காணப்படுகின்றது. 1972 இல் ஒரு மௌனச் செய்திச் சுருள் திரையிடப்பட்டது. பின் 1903 ஆசியாவின் திரைப்பட சங்கத்தில் கொழும்பு திரைப்படச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1947 "கடவுனு பொறன்துவ" முதல் சிங்களத்திரைப்படமாக இந்தியநாட்டு தயாரிப்பில் வெளியானது. சுதந்திரத்தின் பின் 1951 "பொடி புத்தா" திரைப்படம் இலங்கையின் சுயமான சினிமாவிற்கு அடித்தளம் ஆகும். 1956 "ரேகாவா" சிங்கள பாரம்பரியம் பறைசாற்றும் மாற்றுத்திரைப்படமாக வெளிவந்தது. தமிழ் சினிமாவைப் பார்க்கில் சிங்கள நடிகர் நடிகைகளை வைத்து படமாக்கியதோடு சிங்கள மொழிப்படங்கள் மொழிமாற்றமும் செய்யப்பட்டன. 1951 "குசுமலதா" முதல் தமிழ் படமாக வெளியானது. 1951 "தோட்டக்காரி" முதல் வர்ணப்படமாக வெளியிடப்பட்டது. 1978 "சர்மிளாவின் இதயராகம்" தமிழில் வெளியிடப்பட்ட முழுநீள வர்ணத்திரைப்படமாகும். இலங்கையில் யுத்தம் காரணமாக சினிமாவில் வீழ்ச்சிப்போக்கு காணப்பட்டதைத் தொடர்ந்து 2006இல்...