Posts

Showing posts from 2020

பூகோளமயமாதலும் பண்பாட்டு மாற்றமும்

Image
பூகோளமயமாதலால் கலாசாரம்,பண்பாடு மேம்படுகிறதா? பாதிக்கப்படுகிறதா?     பூகோளமயமாதல் என்பது..    தொழிஙட்ப முன்னேற்றம் காரணமாக உலக நாடுகள் ஓர் அலகாக ஒன்றிணைக்கும் செயற்பாடு பூகோளமயமாதல் எனப்படும் . அதாவது உலகளாவிய ரீதியில் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாசாரம், தொடர்பாடல், போக்குவரத்து, தொழிஙட்பம் ஆகிய துறைகளின் உந்துதலினால் உலக நாடுகளிற்கிடையில் இடைவெளி குறைந்து ஒன்றில் ஒன்று தங்கிவாழும் நிலையை உருவாக்கிக்கொள்ளலாகும். இதன்பொருட்டு உலகின் எப்பாகத்திலும் நடக்கும் விடயங்களை அனைவரும் அறியும் வாய்ப்பும் கிட்டுகிறது. இவ் நாடுகளின் ஒன்றிணைவானது அரசு,வணிகம்,சமூகத்தொடர்பு,கலை,பண்பாடு,கல்வி,சுகாதாரம்,வேலைவாய்ப்பு என அனைத்து விடயங்களிலும் உலகநாடுகள் ஒன்றிணைவு பெற்று இயங்கிவருகின்றன. பூகோளமயமாக்கல் என்றால் என்ன என்பது தொடர்பாக பல அறிஞர்கள் பல்வேறுபட்ட வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளார்கள் அந்தவகையில் அன்ரனி கிடன்ஸ் என்பவர் குறிப்பிடும் போது “தொலைவில் இருக்கும் இடங்களை ஒன்றிணைக்கின்ற பல மைல்களுக்கப்பால் நிகழும் சம்பவங்களை உள்ளுர் நிகழ்வுகளாக உருவமைக்கின்ற உலக அளவிலான சமூக உறவுக...

ஒத்த செருப்பு- திரைப்பார்வை

Image
ஒத்த செருப்பு size 7 திரைப்படம் ஒரு பார்வை        20 செப்டம்பர் 2019 வெளியான R. பார்த்தீபனின் ஒத்த செருப்பு திரைப்படம்  திரை உலகின் ஒரு மைல் கல் ஆகும். இத்திரைப்படத்தின் சிறப்பு யாதெனில் எழுத்து ,தயாரிப்பு , இயக்கம், நடிப்பு அனைத்தும் பார்த்திபன்  ஆவார். ஒரு க்ரைம் த்திரில்லர் மூவியான ஒத்த செருப்பு வழக்கமான சினிமாக்களில் இருந்து வேறுபட்டது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி சிறப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இத்திரைப்படத்தில் சட்டகத்தில்(frame) பார்த்தீபன் மட்டுமே இருப்பார் ஏனைய பாத்திரங்கள் குரல்ஒலி ஊடே நகர்கின்றனர். கிட்டத்தட்ட 105 நிமிடங்கள் கொண்ட இத்திரைப்படம் ஒரே ஒரு இடத்திலேயே படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் எடிட்டராக R.சுதர்சனும் பின்னணி இசை C.சத்தியா மற்றும் பாடலுக்கான இசை சந்தோஷ் நாராயணனும்   காணப்படுகின்றனர். ஒரு பாடல் மாத்திரமே வைக்கப்பட்டுள்ளது அதற்கு வரிகள் கவிஞர் விவேக், பாடகர்கள் சித் ஶ்ரீராம்,சங்கீதா,R. பார்த்திபன் ஆகியோராவர். இத்திரைப்படத்தில் மாசிலாமணி என்ற பாத்திரத்தில் பார்த்திபனும் மனைவி கதாபாத்திர குரலில...

தற்காலசூழலில் சமூக ஊடகங்கள் செயற்படும் விதம்

Image
சமூக ஊடகம் எனப்படுவது...                                          சமூக ஊடகங்கள் எனப்படுபவை இணையவழியாக தகவல்கள்,கருத்துக்கள் வெளியிடப்படும் ஒரு தொடர்பாடல் முறையாகும். இவ் சமூக ஊடகங்களுள் Facebook,Twitter,instagram,google,YouTube,viber,whatsapp என பல காணப்படும். இவை தொழிஙட்பத்துடனான விடயங்களாகும். இச் சமூக ஊடகங்கள் பலவித பண்புகளை தன்னகத்தே கொண்டவை. கட்டுப்பாட்டு வரைமுறை அற்ற இவை தகவல்களை கடத்தும் வேகம் ஏனைய ஊடகங்களிலிருந்து வேறுபட்டன. உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு வேகமான முறையில் உடனுக்குடன் தகவலை பரிமாறிக்கொள்ள இவை உதவுகின்றன. இவ் சமூக ஊடகங்களில் அனைத்து ஊடகங்களையும் ஒருங்கே காணும் வாய்ப்பு உள்ளது. அதாவது Facebook ஐ எடுத்துக்கொண்டால்  தொலைக்காட்சி,வானொலி, பத்திரிகை,திரைப்படம் என அனைத்தையும் காணும் வாய்ப்பு காணப்படுகிறது. மேலும் சமூக ஊடகங்களில் ஒவ்வொரு தனிநபரும் ஊடகவியலாளராக செய்திகளை பதிவேற்றும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறான சமூக ஊடகங்களே பிரச்சினையான காலகட்டங்களிலும் தடை இன...

கொரோனாவின் தாக்கத்தால் நாம்

Image
தினக்கூலிகள் “மானிடராய் பிறத்தல் அரிது” ஆம் மனித வரலாற்றில் பல துன்ப துயரங்களை கடந்துதான் வாழவேண்டும்  என்பதே நியதி. அந்த ரீதியில் இன்று உலக நாடுகளையே உலுக்கும் அளவிற்கு கொரோனாவின் தாக்கம்  காணப்படுகின்றது. கொரோனா என்பது கொவிட் 19 என்று பெயர்கொண்டு அழைக்கப்படும் வைரஸ் நோய்க்கிருமி மூலம் உருவான நோயாகும் . இது தடிமன்,இருமல்,காய்ச்சல் போன்ற நோய்க்குறிகள் கொண்டது. ஆரம்பத்தில் சீனாவில் கண்டறியப்பட்ட நோய் இன்று உலக நாடுகள் அனைத்திலும் அதன்தாக்கத்தை செலுத்தியுள்ளது. இந்நோய் எம்நாட்டையும் விட்டுவைக்கவில்லை, நாட்டில் கிட்டத்தட்ட 335 பேர் இந் நோய்க்கு உள்ளாகியிருக்கின்றனர். இன்னும் பலர் தனித்தும் வைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் நாட்டு மக்களின் நலன்கருதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தியுள்ளனர். அதன்காரணத்தால் அனைத்து அரச,தனியார் வேலைகளும் நிறுத்தப்பட்டதுடன் விமானம்,ரயில்,பஸ் போக்குவரத்து நடவடிக்கைகளும் தடைப்பட்டு அனைவரும் ஊரடங்கால் ஸ்தம்பித்து இருக்கின்றனர். இக்காலத்தில் நாம் தினக்கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துவோரை பற்றி சிந்தித்தாகவேண்டும் காரணம் இடைக்கிடையே ஊரடங்கு தளர்த...

தமிழமுதம் 2020

Image
                 தமிழ் எங்கள் உயிர் தமிழ் எங்கள் உணர்வு தமிழர் எம் வீரம்,கலை,பண்பாடு,கலாசாரம்,விழுமியம் அனைத்தையும் ஒன்றினணக்கும் தமிழுக்கு ஓர் விழா தமிழமுதம்  செம்மொழியிலே மூத்த மொழியான தமிழ் இன்று அழிவை எதிர்நோக்கி வருகிறது. தமிழ் எங்கள் அடையாளம் அதை கௌரவிப்பது எமது கடமையாகும்.சேர சோழ பாண்டியர் சங்கம் அமைத்து கட்டிக்காத்த மூத்த மொழியின் மரபு பண்பாட்டை காக்கவேண்டியவர்கள் தமிழர்கள் என்ற வகையில் யாழ்பல்கலை மாணவர் ஒன்றியம் ஏற்பாட்டில் வருடா வருடம் தமிழமுதம் எனும் மாபெரும் திருவிழா இடம்பெறுவது வழக்கம். அந்தவகையில் 08.01.2020 காலை 9 மணிக்கு யாழ்பல்கலைக்கழகத்தில் 2019 க்கான தமிழமுத விழா ஆரம்பமாகி எமது கலை,கலாசார பாரம்பரியங்களுடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு காலை சங்கிலியன் அரங்கில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழர்களுக்கேயான மிடுக்குடன் நடனம்,நாடகம்,கவியரங்கம்,பட்டிமன்றம்,கும்மி,வீணாகானம்,இசை,பறை பாடல் , என பல்வேறு நிகழ்வுகளை காண முடிந்தது.

வாக்கு எங்கள் உரிமை

Image
                                   நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வாக்கு மிக அத்தியாவசியமாகும். வாக்கு என்பது பொது மற்றும் அரசியல் தேர்வுகளில் வாக்களிக்கும் உரிமை ஆகும். வாக்குரிமை தகுதியென்பது 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம்,  சட்டமன்றம், நகராட்சி மன்றம்,  உள்ளூராட்சி மன்றம் ஆகியவற்றுக்கான உறுபிபனர்களைத் தேர்ந்தெடுப்பதற்க்கு தேர்தல்கள் நடைபெறுகின்றன. நாட்டின் குடிமக்கள் தங்கள் வாக்குகளை வழங்கிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வாறு வாக்களிப்பதற்கு குடிமக்களுக்கு உள்ள உரிமையை வாக்குரிமை என்கிறோம்.இத்தகைய வாக்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பாக அறிந்திருப்பது மிகவும் அவசியமானதாகும்.  வாக்களித்தல் என்பது எங்களுக்காக நாங்கள் செய்ய வேண்டிய கடமை. நாங்கள் நேசிக்கும் நபர்களுக்காகவும், எங்கள் நாட்டின் வளர்ச்சிக்காகவும், எங்களது நலனுக்காகவும் நாங்கள் வாக்களிக்கவில்லை என்றால் எங்களுக்காக யார் வாக்களிப்பது ? மக்களால் மக்களுக...

போதை பாவனை அற்ற நாட்டை கட்டியெழுப்புவோம்!

Image
          யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் "மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு" 10.12.2019 (செவ்வாய் கிழமை) ஊடகத்துறை ஆய்வுகூடத்தில் இடம்பெற்றது. இச்செயலமர்வில் ADIC நிறுவனத்தின் நிகழ்ச்சி அதிகாரி ரகீம் மற்றும் உதவி நிகழ்ச்சி அதிகாரி கோடீஸ்வரன் ஆகியோர் வளவாளர்களாகவும் ஊடகக் கற்கைகள் துறையின் இரண்டாம் வருட மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்செயலமர்வில்  1. போதைப்பொருள் பயன்படுத்துவதற்கான காரணம்   2. இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் 3.போதைப்பொருள் உற்பத்தி , விற்பனை மூலம் அரசாங்கத்துக்கு என்ன வருமானம் கிடைக்கின்றது.   4.இதனைத் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.    அந்த வகையில் இன்று ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர். இவர்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு இன்பத்தை பெறலாம் என எண்ணியே போதைப்பொருளை பயனபடுத்துகின்றனர். உண்மையில் இவற்றைப் பயன்படுத்துவதால தீமையே கிடைக்கின்றது. அதாவது ...

பெண் கல்வியின் முக்கியத்துவம்

Image
       ஆண் மகன் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே நன்மை பயக்கும். ஆனால் குடும்பத்தில் ஒரு பெண் கல்வி கற்றால் முழுக் குடும்பமும் நன்மை பெற்றுக் கொள்ளும். சமுதாயத்தில் உள்ள அணைத்து பெண்களும் கல்வி கற்றுக் கொள்வதால் சமுதாயம் முழுவதும் நன்மை பெறுகிறது. அதன் மூலம் முழு நாடும் வளர்ச்சிஅடைகிறது இப்படிக் கூறினார் இந்தியாவின் தேசத்தை சேர்ந்த மகாத்மா காந்தியடிகள். கடந்த நாட்களில் தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக நடத்தப்பட்ட பெண்கள் எப்படி இந்த அளவிற்கு உயர்ந்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் கல்வியே என புலப்படும். கல்விக் கண் என்று ஆன்றோரால் அழைக்கப்படும் கல்வியே மக்களின் கண்களை திறந்தது எனக் கூறலாம். சமுதாயத்தில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது என நாம் ஆராய்ந்து பார்த்தால் ஆண்களுக்கு எப்போதும் உயர்வான அல்லது தலைமை இடங்கள் அளிக்கப்பட்டன. ஆனால் பெண்களுக்கே அடிப்படை வசதிகளும் உரிமைகளும் கூட மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட காலங்களே அதிகமாக ஆதிக்கதிலிருந்ததை சரித்திரத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்பதே அனைவரது கருத்தாகவும் இருந்தது. ஆன...

மீளாத வடுக்கள்...!

Image
சுனாமி              சுனாமிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. கடந்த 2004 டிசம்பர் 26  முற்பகல் 1.30 மணியளவில் இந்தோனேசிய சுமாத்திரா தீவில் 9.2 ரிச்டர் அளவில் ஏற்பட்ட புவி அதிர்வு காரணமாக ஆழிப்பேரலை ஏற்பட்டது. இது உலக வரலாற்றில் மறக்க முடியாத  ஒரு கறுப்பு தினமாகும். இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியிருந்தது. தீவுக்கு கீழே 20 km ஆழத்தில் ஏற்பட்ட இவர் அதிர்வு இலங்கை,இந்தியா,மலேசியா, மியன்மார்,அந்தமான்,தாய்லாந்து உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரைகளைச்சூறையாடிச் சென்றுள்ளது. ஆசிய நாட்டில் 227898 உயிர்களை இந்த ஆழிப்பேரலை காவு கொண்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்களை நிர்க்கதியாக்கியது. இலங்கையில் 40 ஆயிரத்துக்கு மேலான மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதுடன் 21 ஆயிரம் பேர் காயமடைந்ததுடன் 5லட்சம் பேர் நிர்க்கதியாக்கப்பட்டனர் . ஆழிப்பேரலை என்ற சொல்லையும் அதன் தாக்கத்தையும் அதுவரை அறிந்திருக்காத மக்கள் கடலில் திடீரென ஏற்பட்ட மாற்றத்தை பார்க்கக் சென்றனர். இதன் காரணமாகவே பல உயிர்கள் கட...

கனலி சஞ்சிகை வெளியீடு

Image
யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் இரண்டாம் வருட மாணவர்களால் கனலி மாணவர் சஞ்சிகையானது  வெளியிடப்பட்டது. நிகழ்வானது  யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் கலாநிதி சி.ரகுராம் அவர்களின் தலைமையில் 02.12.2019 பி.ப 2மணி தொடக்கம் 4மணி வரை யாழ் பல்கலைக்கழக நூலகக் கலையரங்கில் இடம்பெற்றது..  இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சிரேஷ்ட பேராசிரியர் க. கந்தசாமி (யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி) அவர்களும் சிறப்பு விருந்தினராக  கலாநிதி கே.சுதாகர் ( பீடாதிபதி , கலைப்பீடம் , யாழ் பல்கலைக்கழகம் ) அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் ஊடக வல்லுனர்கள்,துறைசார்ந்தோர், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்திருந்தனர். "நல்லவை  சுடர்விட தீயவை பொசுங்கிட" எனும் தொனிப்பொருளில் ஊடகக் கற்கைகள் துறையின் இரண்டாம்  வருட மாணவர்களால் உருவாக்கப்பட்ட கனலி சஞ்சிகையானது முழுக்க முழுக்க மாணவர்களின் ஆக்கங்களை தாங்கியே வெளிவந்துள்ளது..  மாணவர்களின் அறிக்கையிடல் நுட்பங்களை செய்முறை ரீதியாக வெளிக்கொணரும் வகையில் இச்சஞ்சிகை அமையப் பெற்றுள்ளது.  ...

டெங்கு! அவதானமாக இருப்போம்.

Image
டெங்கு பற்றிய உண்மைகள் டெங்கு வைரசால் டெங்கு நோய் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துவது ஈடிஸ் என்ற பெண் ஙளம்பு ஆகும். இந்நுளம்பு பகலிலேயே அதிகம் கடிக்கும். 3-14 நாட்களில் அறிகுறிகள் தோன்றும்.  டெங்கு காய்ச்சல் திடீரென ஏற்படும். தொடர்ந்து தலைவலி,கண்களின் பின்னால்வலி,தசை,மூட்டுவலி போன்றன ஏற்படும். ஏடிஸ் ஈஜிப்டி என்னும்  உடலில் கோடுள்ள பகலில் கடிக்கும் நுளம்பு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.இந்த நுளம்பு நோயால் பாதிக்கப்பட்ட  ஒரு நபரை கடித்து தன்னுள் வைரஸை  எடுத்து மற்றவர்களிற்கு பரப்புகிறது.இந்த நுளம்பு அநேகமாக மழைக்காலத்தில்  இனப்பெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களாக பூச்சாடிகள்,பிளாஸ்டிக், தேங்காய் சிரட்டைகள் மற்றும் டயர்கள் போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்நோயானது நேரடியாக நோயாளியிடம் இருந்து மற்றவர்களிற்கு பரவாது. நுளம்பின் மூலமே இந்நோய் பரவும் ஆகவே நோயாளியை தொடுதல், அருகில் இருத்தல் என்பவற்றின் மூலம் பரவாது. அறிகுறிகள்   திடீரென கடும் காய்ச்சல்  அதிகமான தலைவலி       ...

சுகாதாரமான நகரைக் கட்டியெழுப்புவோம்.

Image
சுகாதாரமான நகரத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை  கடந்த 03.12.2019 செவ்வாய்க்கிழமை யாழ் வலம்புரி விருந்தினர் விடுதியில் காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வு உலக சுகாதார ஸ்தாபன இலங்கை தலைமைக்காரியாலயம், சுகாதார திணைக்களம் வடமாகாணம், சமுதாய குடும்ப மருத்துவத்துறை மருத்துவபீடம், யாழ் பல்கலைக்கழகம் ஆகியோரின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இதில் ஊடகவியலாளர்கள், யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சுகாதாரமான நகரத்தை கட்டமைத்தல், சிறந்த உணவுப்பழக்கவழக்கங்கள், மரநடுகையை ஊக்குவித்தல், பொலித்தீன் பயன்பாட்டை குறைத்தல், நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தல், ஆரோக்கியமான வைத்தியசாலை சூழலை பேணல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பேசியதுடன் அவற்றை மக்கள் கடைப்பிடிக்க ஊடகவியலாளர்களது அறிக்கையிடலின் தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இயற்கையை பாதுகாப்போம்.

Image
  இயற்கை அற்புதமான படைப்பு .   உலகில் எண்ணற்ற அழகுகளை இயற்கை  எமக்கு  தந்துள்ளது. இந்த இயற்கை காட்சிகளின் இனிமையில் மனதைப் பறிகொடுக்காதவர் யாரும்  இருக்க முடியாது. இயற்கை அன்னை  வழங்கும் இனிய  காட்சிகள் எமக்கு இணையற்ற இன்பம் தருகின்றன. அப்படிப்பட்ட இயற்கை வளங்கள்   இன்று  நவீனவளர்ச்சியினால் அழித்தொழிக்கப்படுகின்றன. ஆரம்பகாலத்தில்  இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த மனிதன் எப்போது இயற்கையை மாற்றியமைக்க தொடங்கினானோ அன்றே இயற்கை வளங்கள்    அழியத்தொடங்கிவிட்டன.  பழந்தமிழர்கள் இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்தனர். இவர்கள் தமது வாழ்க்கையை இயற்கையின்  இனிய சூழலோடு அமைத்துக் கொண்டனர். அவர்கள் தாம்    வாழ்ந்த சூழலினை பண்படுத்தி இயற்கை முறை விவசாயமும் மேற்கொண்டனர்.  ஆனால்  இன்று  நவீன வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட மனிதன்  இயற்கையை அழித்துக் கொண்டதோடு இயற்கை மூலமான நன்மைகளையும் மறந்தவனாக காணப்படுகிறான். இயற்கையை மறந்து செயற்கை உலகின்  மாற்றத்தை எதிர்கொள்ளும் மானிடர்கள் தம் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்...