கொரோனாவின் தாக்கத்தால் நாம்

தினக்கூலிகள்






“மானிடராய் பிறத்தல் அரிது” ஆம் மனித வரலாற்றில் பல துன்ப துயரங்களை கடந்துதான் வாழவேண்டும்  என்பதே நியதி. அந்த ரீதியில் இன்று உலக நாடுகளையே உலுக்கும் அளவிற்கு கொரோனாவின் தாக்கம்  காணப்படுகின்றது. கொரோனா என்பது கொவிட் 19 என்று பெயர்கொண்டு அழைக்கப்படும் வைரஸ் நோய்க்கிருமி மூலம் உருவான நோயாகும் . இது தடிமன்,இருமல்,காய்ச்சல் போன்ற நோய்க்குறிகள் கொண்டது. ஆரம்பத்தில் சீனாவில் கண்டறியப்பட்ட நோய் இன்று உலக நாடுகள் அனைத்திலும் அதன்தாக்கத்தை செலுத்தியுள்ளது. இந்நோய் எம்நாட்டையும் விட்டுவைக்கவில்லை, நாட்டில் கிட்டத்தட்ட 335 பேர் இந் நோய்க்கு உள்ளாகியிருக்கின்றனர். இன்னும் பலர் தனித்தும் வைக்கப்பட்டுள்ளனர்.

 இந்நிலையில் நாட்டு மக்களின் நலன்கருதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தியுள்ளனர். அதன்காரணத்தால் அனைத்து அரச,தனியார் வேலைகளும் நிறுத்தப்பட்டதுடன் விமானம்,ரயில்,பஸ் போக்குவரத்து நடவடிக்கைகளும் தடைப்பட்டு அனைவரும் ஊரடங்கால் ஸ்தம்பித்து இருக்கின்றனர். இக்காலத்தில் நாம் தினக்கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துவோரை பற்றி சிந்தித்தாகவேண்டும் காரணம் இடைக்கிடையே ஊரடங்கு தளர்த்தப்படும்போது பணம் உள்ளவர்கள் கடைகளுக்கு சென்று வாரக்கணக்கில் தமக்கு தேவையானவற்றை வாங்கி வைத்து பயன்படுத்தக்கூடும் ஆனால் அன்றாடம் கூலிவேலைக்கு சென்று பெறும் தினக்கூலியைக் கொண்டு பொருட்கள் வாங்கி வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை பட்டினியாக்கியுள்ளது. கொறோனா எனும் கொடும் கிருமி .

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்றுமதி, இறக்குமதி இன்மையால் பொருட்கள் விலையேற்றம் இத்தினக்கூலிகளை மேலும் நோகடிப்பதாகவுள்ளது.  இவ் வறுமை நிலையை ஈடுசெய்ய பல்கலைக்கழக மாணவர்கள் , ஊடகங்கள் உட்பட்ட தன்னார்வத்தொண்டர்கள் பலர் முன்வந்து நாட்டின் பல பாகங்களிலும் வாழும் தினக்கூலிகள் உட்பட்ட ஏழைகளுக்கு உணவுப்பொருட்கள் கொண்ட பொதிகள் வழங்கப்பட்டதோடு அரசு, அரசு சார்பற்ற நிறுவனங்களும் நிவாரணப்பணிகள் செய்கின்றனர்  .

எனினும் அவர்களின் தேவைகள் சீரான முறையில் நிறைவேற்றப்படுகிறதா என்பது சந்தேகமே. இக் கொறோனா நோய்த்தொற்றுக் காரணமாக கல்வி நடவடிக்கை முற்றாகத்தடைப்பட்டதுடன் அரச,தனியார் வேலைகள் நிறுத்தப்பட்டு வீட்டிலிருந்து வேலை பார்க்கவும் இணையத்தில் கற்றல் மேற்கொள்ள அரசு  நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் ஏழை மாணவர்களால் இதன் பயனை அடையமுடியாதிருப்பதையும் நாம் காணமுடிகின்றது .ஆகவே இதன்பொருட்டு அரசு கவனம் செலுத்துவதோடு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குவதன்மூலம் வழமை நிலையை அடையமுடியும்  என்பது நம்பிக்கை.




Comments

Popular posts from this blog

பூகோளமயமாதலும் பண்பாட்டு மாற்றமும்

பெண் கல்வியின் முக்கியத்துவம்

இயற்கையை பாதுகாப்போம்.