அதிகரித்து வரும் சட்டவிரோத காட்டு மரம் வெட்டுதல்
இலங்கையில் இன்று அதிகம் பேசப்படுகின்ற பிரச்சினைகளில் ஒன்று சட்டவிரோத மரம் வெட்டுதல் ஆகும். இயற்கையின் கொடையான காடுகள் சூழல் சமநிலையில் முக்கிய பங்காற்றுகின்றன. எனினும் இக்காடுகளை அழிப்பதன் காரணத்தால் இன்று செயற்கையாக மரங்களை நாட்டி காடுகளை உருவாக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். அவ்வாறு இருந்தாலும் மனிதன் இன்றும் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டுதல், கடத்துதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதை நாம் அறியாமல் இல்லை.
வடமாகாணத்தில் அதிகளவு காடுகள் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் இன்று காட்டுமரம் வெட்டுதல் தொடர்பாக பல காடழிப்பை எதிர்நோக்கிவருகின்றது.
விவசாயத்திற்காக காடழிப்பு என்பதையும் தாண்டி சட்டவிரோதமாக மரங்களை வெட்டி அதை விற்பனை செய்தலே அதிகமாக காணப்படுகின்றது. முல்லைத்தீவில் அதிகளவாக தேக்கு,முதிரை,பாலை வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக அறியமுடிகின்றது. இதன் பொருட்டு வனவள திணைக்களம் அதிகளவு கவனத்துடன் செயற்பட்டாலும் இரவு வேளைகளில் பலர் மரம் அறுத்து கடத்தும் தொழிலில் ஈடுபடுவதாக அறியமுடிகிறது. இது தொடர்பாக உரிய சட்டநடவடிக்கை காணப்படினும் மக்களின் இச் செயற்பாடு வருத்தத்திற்குரியதொன்றாகவே காணப்படுகிறது.


Comments
Post a Comment