முறையற்ற திண்மக் கழிவகற்றல்
திண்மக்கழிவகற்றல் நகரப்பகுதியைப் பொறுத்தவரை ஒரு பாரதூரமான சிக்கலாகவே காணப்படுகிறது. கிராமங்களில் அதிக பரப்பு காணிகளில் உக்கல் முறையிலோ சரியான முறையிலோ திண்மக்கழிவுகளை அகற்றமுடியும். ஆனால் நகர்ப்புறங்களில் மிகவும் கடினமான ஒன்றாகும்.
சீரற்ற திண்மக்கழிவகற்றலால் விலங்குகள் பறவைகள் பாதிக்கப்படுவதோடு சூழலும் அசுத்தமடைகின்றது. இதனால் பல நோய்கள் ஏற்படுகின்றன. மக்கள் திண்மக்கழிவகற்றலில் சரியான கவனம் செலுத்துவது அவசியமாகின்றது. அதுமட்டுமன்றி நகரசபை திண்மக்கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்துவதிலும் மீள்சுழற்சி செய்வதிலும் கூடிய கவனம் காட்டவேண்டும்.




Comments
Post a Comment