கேள்விக்குறியாகும் முல்லை மீனவர்களின் வாழ்வாதாரம் ?
மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு ஆகும் . அவ்வகையில் விவசாயம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு மீன்பிடியும் முக்கியமாகும் . மானிடம் தோன்றிய காலம் தொட்டு மக்களின் வாழ்வியலோடு இணைந்து பாரம்பரிய கதை பேசும் தொழில்களில் ஒன்றாக மீன்பிடி காணப்படுகின்றது . எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து உலகம் நவீன மறைந்தாலும் இன்றும் பாரம்பரிய தொழில்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளன இலங்கையைப் பொறுத்தவரையில் நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட தீவு என்பதால் மீன்பிடியில் குறிப்பிட்டதொரு இடத்தினை பெற்றுள்ளது இலங்கையில் மீன்பிடித்தொழில் மூலம் உள்நாட்டு மக்களின் கடல் உணவு தேவை பூர்த்தி செய்யப்படுவது மட்டுமன்றி வெளிநாட்டு ஏற்றுமதியும் இடம்பெற்று வருகின்றது . இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு பிரதேசமானது மருதமும் முல்லையும் இணைந்த கடல் வளமும் மண் வளமும் கொண்ட பூமியாக விளங்குகின்றது இங்கே விவசாயத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது அதேபோன்றே மீன்பிடியும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது . முல்லைத்தீவு மீன்பிடியை பொருத்தமட்டில் யுத்தத்திற்கு முன்னைய காலத்தில் அதிகளவான வருமா...