பூகோளமயமாதலால் கலாசாரம்,பண்பாடு மேம்படுகிறதா? பாதிக்கப்படுகிறதா? பூகோளமயமாதல் என்பது.. தொழிஙட்ப முன்னேற்றம் காரணமாக உலக நாடுகள் ஓர் அலகாக ஒன்றிணைக்கும் செயற்பாடு பூகோளமயமாதல் எனப்படும் . அதாவது உலகளாவிய ரீதியில் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாசாரம், தொடர்பாடல், போக்குவரத்து, தொழிஙட்பம் ஆகிய துறைகளின் உந்துதலினால் உலக நாடுகளிற்கிடையில் இடைவெளி குறைந்து ஒன்றில் ஒன்று தங்கிவாழும் நிலையை உருவாக்கிக்கொள்ளலாகும். இதன்பொருட்டு உலகின் எப்பாகத்திலும் நடக்கும் விடயங்களை அனைவரும் அறியும் வாய்ப்பும் கிட்டுகிறது. இவ் நாடுகளின் ஒன்றிணைவானது அரசு,வணிகம்,சமூகத்தொடர்பு,கலை,பண்பாடு,கல்வி,சுகாதாரம்,வேலைவாய்ப்பு என அனைத்து விடயங்களிலும் உலகநாடுகள் ஒன்றிணைவு பெற்று இயங்கிவருகின்றன. பூகோளமயமாக்கல் என்றால் என்ன என்பது தொடர்பாக பல அறிஞர்கள் பல்வேறுபட்ட வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளார்கள் அந்தவகையில் அன்ரனி கிடன்ஸ் என்பவர் குறிப்பிடும் போது “தொலைவில் இருக்கும் இடங்களை ஒன்றிணைக்கின்ற பல மைல்களுக்கப்பால் நிகழும் சம்பவங்களை உள்ளுர் நிகழ்வுகளாக உருவமைக்கின்ற உலக அளவிலான சமூக உறவுக...
Comments
Post a Comment