கேள்விக்குறியாகும் முல்லை மீனவர்களின் வாழ்வாதாரம் ?
மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு ஆகும். அவ்வகையில் விவசாயம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு மீன்பிடியும் முக்கியமாகும். மானிடம் தோன்றிய காலம் தொட்டு மக்களின் வாழ்வியலோடு இணைந்து
பாரம்பரிய கதை பேசும் தொழில்களில் ஒன்றாக மீன்பிடி காணப்படுகின்றது. எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து உலகம் நவீன
மறைந்தாலும் இன்றும் பாரம்பரிய தொழில்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளன இலங்கையைப் பொறுத்தவரையில் நான்கு புறமும்
கடலால் சூழப்பட்ட தீவு என்பதால் மீன்பிடியில் குறிப்பிட்டதொரு இடத்தினை பெற்றுள்ளது
இலங்கையில் மீன்பிடித்தொழில் மூலம் உள்நாட்டு
மக்களின் கடல் உணவு தேவை பூர்த்தி செய்யப்படுவது மட்டுமன்றி வெளிநாட்டு ஏற்றுமதியும் இடம்பெற்று வருகின்றது . இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு பிரதேசமானது
மருதமும் முல்லையும் இணைந்த கடல் வளமும் மண் வளமும் கொண்ட
பூமியாக விளங்குகின்றது இங்கே
விவசாயத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது அதேபோன்றே
மீன்பிடியும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மீன்பிடியை பொருத்தமட்டில்
யுத்தத்திற்கு முன்னைய காலத்தில் அதிகளவான வருமானம் ஈட்டிய ஒன்றாகக் காணப்பட்டது
தற்காலத்தில் பல்வேறுபட்ட
இடர்பாடுகளால் மீன்பிடி பாதிப்பு உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி டோலர்
படகுகள் பாவனை போன்ற பல்வேறுபட்ட காரணங்களால் உள்ளூர் மீன்பிடியை செய்யும்
மீனவர்களுக்கு இது பெரும் சவாலான விடயமாக காணப்படுகின்றது.
முல்லைத்தீவை பொருத்தவரை ஆழ்கடல் மீன்பிடி, கரையோர மீன்பிடி போன்றென மேற்கொள்ளப்படுகின்றன. பொக்கணை,
முள்ளிவாய்க்கால், உப்புமாவெளி, செல்வபுரம், சிலாபத்தை, அளம்பில்,
கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், நாயாறு, செம்மலை போன்றன மீன்பிடி பிரதேசமாகக்
காணப்படுகின்றன.
யுத்தத்திற்கு முன்னைய காலத்தில் அதிக வருமானம் ஈட்ட ஒரு தொழிலாக காணப்பட்ட
மீன்பிடி தற்காலத்தில் நலிவடைந்து வரும் நிலைமையை காணமுடிகின்றது.
பல மக்களும் தமது
வாழ்வாதாரமாககக் கொண்டு செயற்படுகின்ற மீன்பிடியானது தற்காலத்தில் நாட்டின்
பொருளாதார நிலை சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீன்பிடி
நடவடிக்கை பாதிக்கப்படுவதை காணமுடிகின்றது அதாவது கடல் தொழில் செய்வதற்கு தேவையான
உபகரணங்களை பயன்படுத்த எரிபொருள் மிகவும் அவசியமாகின்றது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக
பல்வேறுபட்ட மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
முன்பு அதிக அளவு வாடிகள்
காணப்பட்டதாகவும் தற்காலத்தில் அதன் எண்ணிக்கை குறைவடைந்து பல்வேறுபட்ட மீனவர்கள்
வாழ்வாதாரம் பின்னடைந்து காணப்படுவதால் வெளிநாடுகளை நோக்கி பயணித்து வருவதாகவும்
கூறுகின்றனர். இது இவ்வாறு இருக்க
தற்போதைய பொருளாதார சீர்கேடுகளால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில்
மீனவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் குறிப்பாக ஒருமுறை கடல் தொழிலுக்கு சென்று வர 50 லீட்டருக்கு மேல் மண்ணெண்ணெய் தேவைப்படுவதாக
கூறுகின்றனர். ஆனால் எரிபொருள்
தட்டுப்பாட்டால் இதனை பெறுவது கடினமாக காணப்படுகின்றது. குறிப்பாக தற்காலத்தில் ஒரு குடும்ப அட்டைக்கு 20 லீட்டர்
மண்ணெண்ணெயை கொடுக்கப்படுகின்றது ஆனால் இது ஒரு நாளைக்கு கடல் தொழிலுக்கு செல்வதற்கு போதாமல் இருப்பது கவலைக்கிடமாக
காணப்படுகின்றது.
இதுதொடர்பில் கடற் தொழிலாளி தவராசா அவர்கள் குறிப்பிடுகையில் “நான் கிட்டத்தட்ட
பத்து பேரை வேலையாட்களாக வைத்திருக்கின்றேன் சம்பளம் கொடுக்க முடியவில்லை
எங்களுக்கு போதிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை முன்பு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் கிலோ மீன் கூட கிடைத்து
இருந்தது ஆனால் தற்போது அன்றாட நடவடிக்கையில் அதாவது அன்றாட சம்பளத்திற்கு
போதுமானதாக மட்டுமே உள்ளது. ஒரே நாளில் அனைவரும் படகுகளை கொண்டு
மீன்பிடிக்கச் செல்ல முடியாது குடும்ப
காட்டிற்கு கிடைக்கின்ற மண்ணெண்ணெய் போதாது ஆகையால் மூன்று நான்கு பேர் சேர்ந்து
ஒரு நாளைக்கு ஒரு,இரு படகை கொண்டு
செல்கின்றோம். இந்த நிலை தொடர்ந்து
நீடிக்குமானால் எமக்கு பாரிய நட்டம் மிக்க தொழிலாக மீன்பிடி மாறிவிடும் இதனால் மீனவர்கள் மட்டுமன்றி மீனவர்களை நம்பி
இருக்கின்ற கூலித் தொழிலாளிகள், மக்கள் அனைவரும்
பாதிக்கப்படுவார்கள்“ என தெரிவித்தார்.
முல்லைத்தீவை பொருத்தவரை மண்ணெண்ணெய் படகுகளே காணப்படுகின்றன . கரையோர மீன்பிடி இன் போது வலைகளை இழுப்பதற்கு உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன
அதற்கு டீசல் அவசியமாகின்றது. இவ்வாறிருக்க
எரிபொருள் தட்டுப்பாடுகளால் பல்வேறுபட்ட இன்னல்களை மீனவர்கள் எதிர்நோக்கி
வருகின்றனர். இலங்கையின் அனைத்துப்
பகுதிகளிலும் இந்த பிரச்சினை காணப்பட்டாலும் முல்லைத்தீவை பொருத்தவரை மீன்பிடி
பிரதானமான ஒரு தொழிலாக காணப்படுவதால் அதிகளவாக மீனவர்களும் பொதுமக்களும்
பாதிப்படைந்து வருகின்றனர்.
முல்லை மீனவர்
இதற்காக பல்வேறுபட்ட இடங்களிலும்
ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருந்தது குறிப்பாக முல்லைத்தீவு மீனவர்
சங்கம் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறிருப்பினும் பலரதும் அசமந்தப் போக்கு காரணமாக
பாதிக்கப்படுவது பொது மக்களே. இந்த நிலை மாறும்
பட்சத்திலேயே மக்களுக்கு நன்மை
உண்டாக்கப்படும்.
ஆர்ப்பாட்டத்தின்போது
இவ்வாறான நிலைகளை கருத்தில்கொண்டு அரசும் சரி பொது மக்களும் சரி பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலமே ஒரு சரியான தீர்வுகளை பெற்றுக் கொள்ளமுடியும் என்பது நிச்சயமாகிறது.




Comments
Post a Comment