ஈரான்-இலங்கை நட்புறவுத் திரைப்பட விழா 2019
8 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ‘ராணாவின் மௌனம்’ என்ற படம் திரையிடப்பட்டது.
இத்திரைக்கதையானது ஏழு வயது சிறுமியினதும் காகோலி என்றழைக்கப்படும் அவள் வளர்க்கும் ஒரு கோழி பற்றியதுமாகும் இப்படத்தில் ராணா என்ற சிறுமிக்கும் இக் கோழிக்குமிடையிலான பாசம் , சகோதரத்துவம், பெற்றோர் பிள்ளை உறவு உள்ளிட்ட பல விடயங்களில் வெளிக்காட்டப்பட்டுள்ளது.
மாலை 3 மணியளவில் ‘வீ காவ் எ கெஸ்ற்’ என்ற படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் வயோதிப உறவு, பிள்ளைகள் மீதான அன்பு உள்ளிட்ட பல விடயங்களைப் பேசுகிறது.
9 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு ‘கொக்கற்ரி’ என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. இதில் ரூபாவி என்ற பெண்ணின் கதை கூறப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட கணவன் மீதான காதல் பிள்ளைகள் மீதான அன்பு,உறவுகளில் கொண்ட பாசம் ,அர்ப்பணிப்பு போன்றவற்றை பேசும் படமாக இது காணப்பட்டது.
மாலை 3 மணிக்கு ‘சீஸன் ஒவ் நர்கீஸ்’ என்ற ஈரானிய சமூக பெண்கள் மூவரதும் கதை கூறும் படமாக இது அமைந்திருந்தது.
இத்திரைப்பட விழாவிற்கு சினிமா ஆர்வலர்கள்,பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் , ஆசிரியர்கள்,பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துசிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment