இசை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. நாம் கவலையாக இருக்கும்போது இசையே மருந்தாக அமையும். இன்றைய காலத்தில் அதிகமானோர் எதிர்கொள்ளும் சவால் மன அழுத்தமாகும். வேலைப்பழு,தூக்கமின்மை,ஏழ்மை என பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதன் உச்சகட்டமாக தற்கொலை முயற்சிகளும் காணப்படும். இவற்றிலிருந்து விடுபட தியானம்,யோகா,இசை,பயணம் போன்றன மேற்கொள்ளலாம். இவை மனதிற்கு ஆறுதலைத் தரும்.