Posts

Showing posts from May, 2020

பூகோளமயமாதலும் பண்பாட்டு மாற்றமும்

Image
பூகோளமயமாதலால் கலாசாரம்,பண்பாடு மேம்படுகிறதா? பாதிக்கப்படுகிறதா?     பூகோளமயமாதல் என்பது..    தொழிஙட்ப முன்னேற்றம் காரணமாக உலக நாடுகள் ஓர் அலகாக ஒன்றிணைக்கும் செயற்பாடு பூகோளமயமாதல் எனப்படும் . அதாவது உலகளாவிய ரீதியில் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாசாரம், தொடர்பாடல், போக்குவரத்து, தொழிஙட்பம் ஆகிய துறைகளின் உந்துதலினால் உலக நாடுகளிற்கிடையில் இடைவெளி குறைந்து ஒன்றில் ஒன்று தங்கிவாழும் நிலையை உருவாக்கிக்கொள்ளலாகும். இதன்பொருட்டு உலகின் எப்பாகத்திலும் நடக்கும் விடயங்களை அனைவரும் அறியும் வாய்ப்பும் கிட்டுகிறது. இவ் நாடுகளின் ஒன்றிணைவானது அரசு,வணிகம்,சமூகத்தொடர்பு,கலை,பண்பாடு,கல்வி,சுகாதாரம்,வேலைவாய்ப்பு என அனைத்து விடயங்களிலும் உலகநாடுகள் ஒன்றிணைவு பெற்று இயங்கிவருகின்றன. பூகோளமயமாக்கல் என்றால் என்ன என்பது தொடர்பாக பல அறிஞர்கள் பல்வேறுபட்ட வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளார்கள் அந்தவகையில் அன்ரனி கிடன்ஸ் என்பவர் குறிப்பிடும் போது “தொலைவில் இருக்கும் இடங்களை ஒன்றிணைக்கின்ற பல மைல்களுக்கப்பால் நிகழும் சம்பவங்களை உள்ளுர் நிகழ்வுகளாக உருவமைக்கின்ற உலக அளவிலான சமூக உறவுக...

ஒத்த செருப்பு- திரைப்பார்வை

Image
ஒத்த செருப்பு size 7 திரைப்படம் ஒரு பார்வை        20 செப்டம்பர் 2019 வெளியான R. பார்த்தீபனின் ஒத்த செருப்பு திரைப்படம்  திரை உலகின் ஒரு மைல் கல் ஆகும். இத்திரைப்படத்தின் சிறப்பு யாதெனில் எழுத்து ,தயாரிப்பு , இயக்கம், நடிப்பு அனைத்தும் பார்த்திபன்  ஆவார். ஒரு க்ரைம் த்திரில்லர் மூவியான ஒத்த செருப்பு வழக்கமான சினிமாக்களில் இருந்து வேறுபட்டது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி சிறப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இத்திரைப்படத்தில் சட்டகத்தில்(frame) பார்த்தீபன் மட்டுமே இருப்பார் ஏனைய பாத்திரங்கள் குரல்ஒலி ஊடே நகர்கின்றனர். கிட்டத்தட்ட 105 நிமிடங்கள் கொண்ட இத்திரைப்படம் ஒரே ஒரு இடத்திலேயே படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் எடிட்டராக R.சுதர்சனும் பின்னணி இசை C.சத்தியா மற்றும் பாடலுக்கான இசை சந்தோஷ் நாராயணனும்   காணப்படுகின்றனர். ஒரு பாடல் மாத்திரமே வைக்கப்பட்டுள்ளது அதற்கு வரிகள் கவிஞர் விவேக், பாடகர்கள் சித் ஶ்ரீராம்,சங்கீதா,R. பார்த்திபன் ஆகியோராவர். இத்திரைப்படத்தில் மாசிலாமணி என்ற பாத்திரத்தில் பார்த்திபனும் மனைவி கதாபாத்திர குரலில...

தற்காலசூழலில் சமூக ஊடகங்கள் செயற்படும் விதம்

Image
சமூக ஊடகம் எனப்படுவது...                                          சமூக ஊடகங்கள் எனப்படுபவை இணையவழியாக தகவல்கள்,கருத்துக்கள் வெளியிடப்படும் ஒரு தொடர்பாடல் முறையாகும். இவ் சமூக ஊடகங்களுள் Facebook,Twitter,instagram,google,YouTube,viber,whatsapp என பல காணப்படும். இவை தொழிஙட்பத்துடனான விடயங்களாகும். இச் சமூக ஊடகங்கள் பலவித பண்புகளை தன்னகத்தே கொண்டவை. கட்டுப்பாட்டு வரைமுறை அற்ற இவை தகவல்களை கடத்தும் வேகம் ஏனைய ஊடகங்களிலிருந்து வேறுபட்டன. உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு வேகமான முறையில் உடனுக்குடன் தகவலை பரிமாறிக்கொள்ள இவை உதவுகின்றன. இவ் சமூக ஊடகங்களில் அனைத்து ஊடகங்களையும் ஒருங்கே காணும் வாய்ப்பு உள்ளது. அதாவது Facebook ஐ எடுத்துக்கொண்டால்  தொலைக்காட்சி,வானொலி, பத்திரிகை,திரைப்படம் என அனைத்தையும் காணும் வாய்ப்பு காணப்படுகிறது. மேலும் சமூக ஊடகங்களில் ஒவ்வொரு தனிநபரும் ஊடகவியலாளராக செய்திகளை பதிவேற்றும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறான சமூக ஊடகங்களே பிரச்சினையான காலகட்டங்களிலும் தடை இன...