வாசிப்பின் அவசியமும் நூலக உருவாக்கமும்
வாசிப்பை ஊக்குவித்தலும் நூலக உருவாக்க முயற்சியும் ‘ சமூகத்தில் இல்லாதவற்றை செய்ய விளைவது அபிவிருத்தி அல்ல , சமூகத்தின் தேவையை கண்டறிந்து அதனை செய்வதே ஒரு பயனுள்ள அபிவிருத்தி ’ அந்த வகையில் இது வாசிப்பு மாதம் ஆகையால் வாசிப்பும் நூலகமும் தொடர்பாக பார்ப்பது பயனாக இருக்கும் . வாசிப்பு ஏன் முக்கியம் என்ற கேள்வி உங்களில் பலருக்கும் எழலாம் . ஏன் நாங்கள் வாசிப்பது இல்லையா என்று கூட நீங்கள் கேள்வி எழுப்பலாம் . ஆம் தினமும் திறன்பேசிக்குள் மூழ்கித் திழைக்கும் நாம் அதனூடாக பல விடயங்களை அறிகின்றோம் . ஆனால் புத்தகங்களை நேரம் ஒதுக்கி எத்தனைபேர் வாசிக்கிறோம் என்றால் அது கேள்விக்குறிதான் . ஒருவர் புத்தகத்தைத் தொட்டுணர்ந்து அதை வாசித்துப் பயனடைவது போன்று வேறு எவ்வழியில் வாசிப்பதாலும் திருப்திபெற முடியாது . காரணம் நூல் தலைசிறந்த நண்பன் என்பார்கள் சிறந்த நண்பன் ஒருவன் எமக்கு அருகில் இருந்து எம்மை சரியாக வழிநடத்துவது போன்ற உணர்வை ஒரு நல்ல புத்தகத்தால் தர முடிகின்றது . இ...