Posts

Showing posts from April, 2020

கொரோனாவின் தாக்கத்தால் நாம்

Image
தினக்கூலிகள் “மானிடராய் பிறத்தல் அரிது” ஆம் மனித வரலாற்றில் பல துன்ப துயரங்களை கடந்துதான் வாழவேண்டும்  என்பதே நியதி. அந்த ரீதியில் இன்று உலக நாடுகளையே உலுக்கும் அளவிற்கு கொரோனாவின் தாக்கம்  காணப்படுகின்றது. கொரோனா என்பது கொவிட் 19 என்று பெயர்கொண்டு அழைக்கப்படும் வைரஸ் நோய்க்கிருமி மூலம் உருவான நோயாகும் . இது தடிமன்,இருமல்,காய்ச்சல் போன்ற நோய்க்குறிகள் கொண்டது. ஆரம்பத்தில் சீனாவில் கண்டறியப்பட்ட நோய் இன்று உலக நாடுகள் அனைத்திலும் அதன்தாக்கத்தை செலுத்தியுள்ளது. இந்நோய் எம்நாட்டையும் விட்டுவைக்கவில்லை, நாட்டில் கிட்டத்தட்ட 335 பேர் இந் நோய்க்கு உள்ளாகியிருக்கின்றனர். இன்னும் பலர் தனித்தும் வைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் நாட்டு மக்களின் நலன்கருதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தியுள்ளனர். அதன்காரணத்தால் அனைத்து அரச,தனியார் வேலைகளும் நிறுத்தப்பட்டதுடன் விமானம்,ரயில்,பஸ் போக்குவரத்து நடவடிக்கைகளும் தடைப்பட்டு அனைவரும் ஊரடங்கால் ஸ்தம்பித்து இருக்கின்றனர். இக்காலத்தில் நாம் தினக்கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துவோரை பற்றி சிந்தித்தாகவேண்டும் காரணம் இடைக்கிடையே ஊரடங்கு தளர்த...