Posts

Showing posts from December, 2019

ஊடக ஜாம்பவான் பெருமாள் ஐயா

Image
மூத்த ஊடகவியலாளர் பி.எஸ் பெருமாள் பி.எஸ் பெருமாள் அவர்கள் 1933.12.21 இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானை பகுதியில்  பிறந்தவர். இவர் கல்வியில் ஆர்வம் மிக்கவர் என்பதோடு பல்துறைசார் அறிவும் உடையவர.1950களில் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றத்தொடங்கி அதன்பின் ஈழநாடு பத்திரிகையில் ஆசிரியராக  பணி புரிந்தார். மும்மொழி திறன் மிக்க இவர் கவிதை,சிறுகதை என பல ஆக்கங்கள் எழுதும் திறமையுடையவர்.இவர் உதயன்,யாழ் களரி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியதோடு கலாபூசணம் விருது பெற்ற பெருமைக்குரியவர். பல்துறைகளிலும் சிறந்து விளங்கிய மூத்த ஊடகவியலாளரான இவர் 05.11.2019 செவ்வாய்க்கிழமை உயிர் நீத்தார். இவரது ஆசைக்கு இணங்க இவரது உடல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு உறவினரால் கையளிக்கப்பட்டது.  இறக்கும் வரை யாழ் களரி மாத பத்திரிகை ஆலோசகராக பணியாற்றியது குறிப்பிடத்தக்க விடயமாகும் .இறந்தும் வாழும் மகானுடைய 31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு 05.12.2019 காலை 11 மணியளவில் யாழ் ராஜா கிறீம்  ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் அமரரின் குடும்பத்தினர்,நலன்விரும்பிகள்,ஊடகவியலாளர்கள், யாழ் ப...

ஈரான்-இலங்கை நட்புறவுத் திரைப்பட விழா 2019

Image
  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் துறை ஏற்பாட்டில் ஈரான்-இலங்கை நட்புறவுத்திரைப்படவிழா 8,9 நவம்பர் 2019 இடம்பெற்றது. இவ் விழாவை ஊடக கற்கைகள் துறைத்தலைவர்  கலாநிதி சி.ரகுராம் அவர்கள்  தலைமையேற்று நடத்தினார். காலை 10 மணியளவில் மங்கள விளக்கேற்றுதலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் 4 ஈரானிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. 8 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ‘ ராணாவின் மௌனம் ’ என்ற படம் திரையிடப்பட்டது. இத்திரைக்கதையானது ஏழு வயது சிறுமியினதும் காகோலி என்றழைக்கப்படும் அவள் வளர்க்கும் ஒரு கோழி பற்றியதுமாகும் இப்படத்தில் ராணா என்ற சிறுமிக்கும் இக் கோழிக்குமிடையிலான பாசம் , சகோதரத்துவம், பெற்றோர் பிள்ளை உறவு உள்ளிட்ட பல விடயங்களில் வெளிக்காட்டப்பட்டுள்ளது. மாலை 3 மணியளவில் ‘ வீ காவ்  எ கெஸ்ற் ’ என்ற படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் வயோதிப உறவு, பிள்ளைகள் மீதான அன்பு உள்ளிட்ட பல விடயங்களைப் பேசுகிறது. 9 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு ‘ கொக்கற்ரி ’ என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. இதில் ரூபாவி என்ற பெண்ணின் கதை கூறப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட கணவன் மீதான காதல் பிள்ள...