ஊடக ஜாம்பவான் பெருமாள் ஐயா
மூத்த ஊடகவியலாளர் பி.எஸ் பெருமாள் பி.எஸ் பெருமாள் அவர்கள் 1933.12.21 இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானை பகுதியில் பிறந்தவர். இவர் கல்வியில் ஆர்வம் மிக்கவர் என்பதோடு பல்துறைசார் அறிவும் உடையவர.1950களில் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றத்தொடங்கி அதன்பின் ஈழநாடு பத்திரிகையில் ஆசிரியராக பணி புரிந்தார். மும்மொழி திறன் மிக்க இவர் கவிதை,சிறுகதை என பல ஆக்கங்கள் எழுதும் திறமையுடையவர்.இவர் உதயன்,யாழ் களரி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியதோடு கலாபூசணம் விருது பெற்ற பெருமைக்குரியவர். பல்துறைகளிலும் சிறந்து விளங்கிய மூத்த ஊடகவியலாளரான இவர் 05.11.2019 செவ்வாய்க்கிழமை உயிர் நீத்தார். இவரது ஆசைக்கு இணங்க இவரது உடல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு உறவினரால் கையளிக்கப்பட்டது. இறக்கும் வரை யாழ் களரி மாத பத்திரிகை ஆலோசகராக பணியாற்றியது குறிப்பிடத்தக்க விடயமாகும் .இறந்தும் வாழும் மகானுடைய 31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு 05.12.2019 காலை 11 மணியளவில் யாழ் ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் அமரரின் குடும்பத்தினர்,நலன்விரும்பிகள்,ஊடகவியலாளர்கள், யாழ் ப...