இன்றும் தொடரும் போராட்டம்
நான் போராட்டம் என்று கூறும்போது எல்லோரும் எதை பற்றி நினைப்பார்கள் என்று நான் அறிவேன் ஆனால் நான் இங்கு குறிப்பிடும் போராட்டம் வேறு. இன்று விவசாயிக்கும் காட்டு யானைகளுக்குமிடையிலான போராட்டம் அளப்பெரியது. விவசாயம் என்பது மனிதனின் பூர்வீக தொழில் எனினும் இன்று நவீனம் வளரும்போது விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொள்வதிலும் பார்க்க வெவ்வேறு இயந்திரவியல் தொழில்களையே விரும்பிச் செய்கின்றனர். இன்று அனைத்தும் விஞ்ஞானமயமாகிவிட்டபோதும் இயந்திரபாவனை மத்தியிலும் விவசாயத்தையே தன்னகத் தொழிலாகக்கொண்ட போற்றத்தக்க விவசாயிகள் வாழ்ந்தவண்ணமே உள்ளனர். இலங்கையைப் பொறுத்தமட்டில் பெருமளவில் விவசாயமே வாழ்வாதாரம். அவ்வாறிருக்க வன்னியை பொறுத்தமட்டில் மீள்குடியேற்றத்தின் பின்பு காட்டு யானைகளின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. காட்டு யானைகள் பயிர்நிலங்களிற்குள்ளும் மக்களின் வாழ்விடங்களிற்குள்ளும் உட்புகுந்து சேதப்படுத்துவதும் விளைச்சலை அழிப்பதும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது.